தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முதல் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் சந்திரகலாவை வைத்து காளியம்மாவுக்கு போன் போட வைத்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சாமியாராக மாறிய மயில்வாகனம்:
அதாவது சாமுண்டீஸ்வரியிடம் இருந்து வீட்டை எழுதி வாங்கிய நபர்கள் காளியம்மா வீட்டில் தான் மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற உண்மை கார்த்திக்கு தெரிய வருகிறது.
இதனால் காளியம்மாவை மடக்கி பிடிக்க கார்த்திக் திட்டம் ஒன்றை போடுகிறான். பிறகு மயில்வாகனம் சாமியார் வேடத்திற்கு மாறுகிறான். சாமுண்டீஸ்வரியின் நான்கு பெண்களும் அவனுக்கு உதவி பெண்களாக மாறுகின்றனர். காளியம்மா வீட்டிற்குள் நுழைந்து அவளை நம்ப வைத்து வீட்டில் பூஜை செய்ய வேண்டும், எல்லா ரூமிலும் சென்று பூஜை செய்து தீர்த்தத்தை தெளிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். ஆனால் எல்லா ரூமையும் திறந்து காட்டும் காளியம்மா ஒரு ரூமை மட்டும் திறக்காமல் அந்த ரூமில் பூஜை செய்ய வேண்டாம் என்று சொல்கிறாள். அந்த ரூமில் தான் சம்மந்தப்பட்ட நபர்கள் மறைத்து வைக்கப்பட்டு உள்ளனர் என்பது தெரிய வர மயில் வாகனம் கார்த்திக்கு தகவல் கொடுக்கிறான்.
கையை விரித்த வழக்கறிஞர்:
மறுபக்கம் சாமுண்டீஸ்வரி லாயரை வர வைத்து சிவனாண்டி சொத்தை எழுதி வாங்கிய விஷயத்தை சொல்கிறாள். ஆனால் லாயர் நீங்க எப்படி இப்படி ஏமாந்தீங்க? ஆச்சரியமா இருக்கு என்று சொல்கிறார். மேலும் சிவனாண்டி பயங்கரமாக பிளான் போட்டு உங்க கிட்ட கையெழுத்து வாங்கி இருக்கான், சட்ட ரீதியா இதுல எதுவும் பண்ண முடியாது என்று ஷாக் கொடுக்கிறார்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.