உலகின் மிக பிரபலமான சர்வைவர் நிகழ்ச்சியை இந்தியாவிற்கு கொண்டுவர ஜீ நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் vs சர்வைவர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்படி சில போட்டியாளர்கள் ஒரு வீட்டில் தங்கி விளையாடுவார்களோ அதேபோல் சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒரு தீவில் தங்கி விளையாடுவார்கள். அந்த தனித்தீவில் நூறு நாட்கள் தாக்குப்பிடித்து இறுதி வரை யார் இருக்கிறார்களோ, அவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
ஒரு வீட்டிற்குள் 100 நாட்கள் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பலமான ஆதரவு ரசிகர்கள் மத்தியில் கிடைக்க, ஒரு முழு தீவையும் வாடகைக்கு எடுத்து சர்வைவர் நிகழ்ச்சியை நடத்த ஜீ நிறுவவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தென்னாப்பிரிக்கா அருகே ஒரு தனித்தீவை பார்த்து வைத்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிகழ்ச்சியை இந்தியாவில் தயாரிக்க தேவையான அனுமதியும் ஜீ நிறுவனம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மும்பையின் பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் ஜீ நிறுவனம் கைகோர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழில் சர்வைவர்
முக்கியமாக தமிழ் மொழியில் சர்வைவர் நிகழ்ச்சியை தயாரிக்க ஜீ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சர்வதேச சர்வைவர் நிகழ்ச்சிகள் எப்படி நடைபெறுமோ, அதே போல் தமிழிலும் 16 போட்டியாளர்களுடன் களமிறங்க ஜீ நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. நடிகர் சிம்பு, தனுஷ், சிவ கார்த்திகேயன் ஆகியோரை போட்டியாளராக ஜீ நிறுவனம் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதுவரை 40 சீசன் சர்வைவர் நிகழ்ச்சி வெற்றிகரமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2012ம் ஆண்டு சர்வைவர் இந்தியா என்ற நிகழ்ச்சி எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.