நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான "கோமாளி" திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அப்படம் ஒரு சூப்பர் டூப்பர் வெற்றி படமாக அமைந்தது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான 'லவ் டுடே' திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்றது. லவ் டுடே திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது.  



ஜாலியான அட்மாஸ்பியர் :


'லவ் டுடே' 100வது நாள் வெற்றி கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படம் குறித்த தனது அனுபவம் குறித்து பேசுகையில்  இந்த திரைப்படத்திற்காக மிகவும் ஜாலியாக வேலை செய்தோம். இதற்காக அதிகமாக யோசிக்கவோ, கஷ்டப்படவோ இல்லை.  வேலை செய்யும் அட்மாஸ்பியர் ஜாலியாக இருந்ததால்தான். அது மக்களிடமும் அதேபோல போய் சேரும். அப்படித்தான் இந்த படத்தின் பாடல்கள் வெற்றி பெற்றன. 


பிரதீப் - யுவன் காம்போ :


யுவன் ஷங்கர் ராஜா இசை 'லவ் டுடே' படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. பிரதீப் - யுவன் காம்போ பற்றி கூறுகையில் 'இது நல்லா இருக்கே'ஓக்கே என்று சொன்னேன் என்றார் யுவன். இப்படத்தின் கதை கேட்டவுடனேயே இது நிச்சயம் ஹிட்டாகும்  என சொல்லிக்கொண்டே இருந்தேன். அதன் திரைக்கதையில் ஒரு பல்ஸ் இருந்தது. இன்றைய ஜெனெரேஷனுடன் ஒத்துப்போவதால் அவர்களால் இதனுடன் ரிலேட் செய்ய முடியும் என நினைக்கையில் இது நிச்சயம் ஒரு வெற்றி படமாக அமையும் என்பது அன்றைக்கே தெரியும். 


திரையில் ஒர்க் அவுட்டானது :


'என்னை விட்டு உயிர் போனாலும்...' பாடலின் வரிகளை எழுதியது பிரதீப் ரங்கநாதன். முதலில் இந்த பாடலை கேட்டவர்கள் வரிகள் இன்னும் கூட கொஞ்சம் பெட்டராக இருந்து இருக்கலாம் என்றனர். ஆனால் அந்த பாடலை திரையில் பார்த்தபிறகு படத்தின் காட்சிக்கு சரியாக ஒத்துப்போனதால் அது நன்றாக ஒர்க் அவுட் ஆனது. அவரவரின் திறமை மேல் நம்பிக்கை இருந்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்பதற்கு ஒரு   ரோல் மாடலாக இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஜொலிக்கிறார் பிரதீப் ரங்கநாதன். 


யுவன் ஃபேவரட் பச்சை இலை :


லவ் டுடே திரைப்படத்தில் அனைத்து பாடல்களுமே ஹிட் பாடல்களாக அமைந்தது. அதில் யுவனுக்கு மிகவும் பிடித்த பாடல் 'பச்சை இலை...' பாடல் தானாம். அதன் ரிதம் அவருக்கு மிகவும் பிடித்தது. மேலும் மிகவும் ஜாலியாக கொஞ்ச நேரத்திலேயே அதை கம்போஸ் செய்துள்ளார்கள்.