Premji Amaran Latest Post: யுவன் கொடுத்த கிஃப்ட்டால் அப்செட்டான வெங்கட் பிரபு! - வைரலாகும் போஸ்ட்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் 'கஸ்டடி' படத்திற்கு இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.

Continues below advertisement

கோலிவுட் சினிமாவின் மிகவும் பிரபலமான சகோதரர்களான வெங்கட் பிரபு மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் இதுவரையில் வெளியான அனைத்து பாடல்களுக்கும் சூப்பர்ஹிட் பாடல்கள். அந்த வகையில் இவர்களின் கூட்டணி மீண்டும் 'கஸ்டடி' திரைப்படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. 

Continues below advertisement

 

சூப்பர் ஹிட் காம்போ :

வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசைமைப்பில் உருவான அனைத்து பாடல்களுமே இதுவரையில் சூப்பர் ஹிட் வெற்றி பாடல்களாக அமைந்துள்ளது. அவர்களின் பிஜிஎம் என்றுமே கலக்கலான ஒரு படைப்பாக இருக்கும். இவர்களின் காம்போ சென்னை 600028 திரைப்படம் தொடங்கி மாநாடு வரை பயணித்து, தற்போது 'கஸ்டடி' வரை தொடர்கிறது. 

 


டோலிவுட்டில் அறிமுகமாகும் வெங்கட் பிரபு :

வெங்கட் பிரபு இயக்கத்தில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் நாக சைதன்யா நடிக்கும் 'கஸ்டடி' திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தில் நாக சைதன்யா ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்க, இவர்களுடன் அரவிந்த் சுவாமி, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி அமரன், பிரேமி விஸ்வநாத், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வெங்கட் பிரபு டோலிவுட்டில் அறிமுகமாகும் முதல் திரைப்படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக  உள்ளது. 

 

 

பிரேம்ஜி அமரன் லேட்டஸ்ட் போஸ்ட் :

இந்த நிலையில், வெங்கட் பிரபுவின் இளைய சகோதரரான பிரேம்ஜி அமரன் லேட்டஸ்டாக ஒரு போட்டோ ஒன்றை சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் யுவன் சாகர் ராஜா, பிரேம்ஜி அமரனுக்கு ஒரு ஐ போன் ஒன்றை பரிசளித்துள்ளார்.

இந்த போஸ்டிற்கு பிரேம்ஜி "எனது இசைகுருவுக்கு நன்றி. எனக்கு ஐ போன் ஒன்றை பரிசளித்ததற்காக ஐ லவ் யூ" என குறிப்பிட்டு இருந்தார். மேலும் அந்த போட்டோவில் இருந்து மற்றுமொரு சுவாரஸ்யமான ஹைலைட் என்னவென்றால், வெங்கட் பிரபு முகம் கவலையில் தொங்கிப்போய் இருந்தது. அதற்கு காரணம் எனக்கு எதுவும் பரிசு இல்லையா யுவன் என கேட்பது போல இருந்தது. இந்த போஸ்ட் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

இந்த சகோதரர்களுக்கு இடையில் இருக்கும் நட்பு, கிண்டல், கலாட்டாவை ரசிகர்களால் ரசிக்காமல் இருக்கவே முடியாது. இந்த கூட்டணி மீண்டும் கஸ்டடி திரைப்படம் மூலம் இணைவது ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் யுவன் சாகர் ராஜாவுடன் மேஸ்ட்ரோ இளையராஜாவும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola