தென்னிந்திய திரையுலகின் மிகப்பெரிய நடிகையாக உலா வருபவர் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இவர் நடித்துள்ளார். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

நயன்தாரா நார்மல் பீபுள் இல்லையா?


லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிக்கு வந்த நயன்தாராவை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்தனர். தனியார் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் நயன்தாராவை காண ரசிகர்கள் குவிந்த நிலையில், அங்கு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த குழுவில் இருந்த ஒருவர் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மேம் கஷ்டப்பட்டு வந்துருக்காங்க.. தயவுசெஞ்சு கோ ஆப்ரேட் பண்ணுங்க... அவங்க நார்மல் பீபுள் கிடையாது என்று கூறினார்.






இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நயன்தாரா என்ன சாதாரண நபர் இல்லையா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மதுரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா வந்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு 6 மணி நேரம் தாமதமாக வந்திருந்த நயன்தாராவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர்ஸ், ரசிகர்கள் என பலரும் குவிந்தனர். 


குவியும் விமர்சனம்:


விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நயன்தாரா ரசிகர்கள் சிலருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர், அங்கிருந்து சென்று விட்டார். நயன்தாரா சாதாரண நபர் இல்லை என்று கூறிய அந்த இளைஞரை இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த நயன்தாரா பெண் ரசிகைகளுக்கு கை கொடுக்கவும் மறுத்துவிட்டார். மேலும் தன்னிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்ட சிறுமியிடமும் சிரித்துக்கொண்டே நகர்ந்து விட்டார் என்ற விமர்சனமும் எழுந்தது.