இந்த ஜெனரேஷன் ஆண்கள் மாறிவிட்டனர் என்று நிதியாமேனன் நற்சான்றிதழ் கொடுத்துள்ளார்.


தனுஷ் நடித்த  யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர்  4வது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் “திருச்சிற்றம்பலம்”. 


இந்த படத்தை தனுஷின் படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை தொடர்ந்து 3வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்து. இப்படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷிகண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க அனிருத் இசையமைத்துள்ளார். 


கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் - அனிருத் கூட்டணி இணைந்துள்ளதால் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் படமானது ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரிலீஸானது. இரண்டு நாளில் ரூ.20 கோடி வசூலித்து மாஸ் ஹிட் கொடுத்துள்ளது திருச்சிற்றம்பலம் திரைப்படம். இந்த படத்தில் தனுஷ் தாய் கிழவி,மேகம் கருக்காதா பெண்ணே, தேன்மொழி ஆகிய 3 பாடல்களை எழுதியுள்ளார். மூன்று பாடல்களுமே யூத் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகை நித்யாமேனன் யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார்.


அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:


“என் திரைவாழ்வில் நான் இன்னும் நிறைய புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். நான் நடிக்க வந்தபோது ரொம்ப கேஸுவலாக நடிச்சேன். ஆனா இப்போதெல்லாம் ரொம்ப கான்ஸியஸாக நடிக்கிறேன். அப்படியில்லாமல் முன்புபோல் கேஸுவலாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 
சினிமாவில் நடிகைகள் என்றால் ஈஸியா எடுத்துக்குறாங்க. சில நேரங்களில் அவர்களாகவே வந்து கை கொடுப்பார்கள். அப்போது நமக்கு கைகொடுக்க விருப்பமிருக்காது. இருந்தாலும் கொடுத்தாக வேண்டிய நிர்பந்தம் இருக்கும். ஆனால் ஒரு விஷயம் சொல்லணும் இப்ப இருக்க யங் ஜெனரேஷன் ஆண்கள் நிறைய மாறிவிட்டனர். அவர்கள் பெண்களை மதிக்கின்றனர். மாண்புடன் நடத்துகின்றனர். அட்லீஸ்ட் நான் பார்த்த மனிதர்களை வைத்தாவது நான் இதை சொல்லிக் கொள்கிறேன்.




நான் தனுஷுடன் நடிப்பது இதுவே முதல்முறை. ஆனால் ஆடுகளம் படத்திலேயே என்னை கேட்டார்கள். அப்புறம் 2018ல் ஒருபடத்தில் கேட்டனர். ஆனால் அப்போதெல்லாம் சில காரணங்களால் அமையவில்லை. திருச்சிற்றம்பலம் பொருந்திவிட்டது. தனுஷ் நல்ல நண்பர். அவர் என்னிடம் இந்தப் படத்திற்காக இன்னும் கொஞ்சம் குண்டாகச் சொன்னார். நீ சப்பி இருந்தா தான் அழகா இருப்ப என்றார். இந்தப் படத்தில் மூன்று ஹீரோயின்கள் இருந்ததால் ஈகோ க்ளாஷ் எல்லாம் இல்லவே இல்லை. உண்மையில் பெண்கள் ஒருவொருக்கொருவர் உதவியாகத் தான் இருக்கின்றனர். அப்புறம் தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் என்று நிறைய நல்ல திறமையான நடிகர்கள் இருந்ததால் எனக்கு பதற்றம் எல்லாம் இல்லை. பாரதிராஜா சார் என்னை குழந்தைபோல் பார்த்துப்பார். பிரகாஷ் ராஜ் எங்கள் குடும்ப நண்பர். தனுஷ் நான் எல்லாம் பட்டீஸ். அதனால் ரொம்ப ஸ்மூத்தா இருந்துச்சு. நான் எப்பவுமே நடிப்பை போட்டியாக செய்ய மாட்டேன். அது ஆரோக்கியமானது இல்லை”


இவ்வாறு நித்யா மேனன் கூறியுள்ளார்.