பிரபல இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுக்கு திருமணம் நடந்துள்ளது.
2014 ஆம் ஆண்டு விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘பண்ணையாரும் பத்மினியும்’ படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஜஸ்டின் பிரபாகரன். இவருக்கு இன்று திருமணம் நடந்துள்ளது. இந்த நிகழ்வு தொடர்பான புகைப்படத்தை நடிகர் பால சரவணன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் அவர், “ எங்கள் கூட்டத்தின் கடைசி சிங்கிள் இன்று முதல் சங்க உறுப்பினர் ஆகிறான்.. வாழ்த்துகள் நண்பா” என்று பதிவிட்டு இருக்கிறார்.
மதுரையை பிறப்பிடமாக கொண்ட ஜஸ்டின் பிரபாகரனுக்கு சிறுவயதில் இருந்தே இசை மீது அதிக ஆர்வம். திரையுலகில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜூடன் இணைந்து ‘துப்பாக்கி’ படத்தில் இணைந்து பணியாற்றிய அவர் 55 குறும்படங்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார்.
-
தமிழில் ‘பண்ணையாரும் பத்மினியும்’ படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான ஜஸ்டின் தொடர்ந்து ‘ஆரஞ்சு மிட்டாய்’ ‘ஒரு நாள் கூத்து’, ‘தொண்டன்’ ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ ‘மான்ஸ்டர்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தார். இந்த ஆண்டு பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் பான் இந்தியா படமாக உருவான ‘ராதே ஷ்யாம்’ படத்திற்கு இசைமைத்து இருந்தார். இந்தப்படம் படுதோல்வியை சந்ததித்து. தற்போது ஜஸ்டின் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கும் ‘கட்டா குஸ்தி’ படத்தில் பணியாற்றி வருகிறார்.