தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவராக கருதப்படுகிறவர் நடிகர் யோகி பாபு. பல மாஸ் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு காமெடி கதாபாத்திரங்கள் மட்டுமின்றி சில சமயங்களில் தன்னுடைய தோற்றத்திற்கு ஏற்றாற்போல் அமையும் படங்களில் லீடிங் ரோல்களிலும் கலக்கி வருகிறார். 


 



திறமையான நடிகர் :


யோகி பாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' திரைப்படம் மிக பெரிய வெற்றி படமாக அமைந்து பாராட்டுகளை குவித்தது. பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் 'பொம்மை நாயகி' படத்திலும் சீரியஸான கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்திருந்தார். தற்போது பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள ஃபீல் குட் காமெடி திரைப்படமான 'லக்கி மேன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் போஸ்ட் புரொடக்‌ஷன் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. நடிகர் சித்தார்த்துடன் இணைந்து நடித்துள்ள 'டக்கர்' திரைப்படம் வரும் ஜூன் 9ம் தேதி வெளியாக உள்ளது. தங்கர்பச்சன் இயக்கத்தில் பாரதிராஜா, கௌதம் மேனன் உடன் இணைந்து 'கருமேகங்கள் கலைகின்றன' படத்தில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி கைவசம் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படி திறமையால் தனக்கான இடத்தை பிடித்தவர் யோகி பாபு. 


 






 


ஒர்க் அவுட் செய்யும் யோகி பாபு :


இருப்பினும் யோகி பாபு பல வகையான உருவ கேலிகளை அனுபவித்துள்ளார். அவரின் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் தான் இந்த இடத்தில கொண்டு வந்துள்ளது. அதை மேலும் மெருகேற்றும் வகையில் தீவிரமாக ஒர்க் அவுட் செய்வதில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார் நடிகர் யோகி பாபு. ஜிம்மில் அவர் மிகவும் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


இந்த வீடியோவுக்கு அவரின்  ரசிகர்கள் கமெண்ட் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள். உருவ கேலி செய்தவர்களுக்கு எல்லாம் விரைவில் சரியான பதிலடியை கொடுப்பார் யோகி பாபு என்பது அவரின் இந்த முயற்சியின் மூலம் வெளிப்படுகிறது.