தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. தற்போது கோலிவுட்டின் டாப் நடிகர்களான அஜித்துடன் வலிமை மற்றும் விஜயுடன் பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சாந்தனு கதாநாயகனாக நடித்து விரைவில் வெளியாக உள்ள ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தில் காமெடியனாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின்  2இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. அப்போது பேசிய யோகி பாபு தனது கடந்த கால வாழ்க்கை மற்றும் தான் நடிக்கும் படங்கள் குறித்து பகிர்ந்துக்கொண்டார்.


 






 


அப்போது பேசிய யோகிபாபு  15 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு முதன் முதலில் சினிமா வாய்ப்பு கொடுத்தவர் கே.பாக்கியராஜ் சார். தினமும் அவரது அலுவலக வாசல் அருகில் உள்ள தள்ளுவண்டி டீக்கடை முன்பாக வாய்ப்பு தேடி நிற்ப்பேன்.அவர் அன்று வாய்ப்பு கொடுத்ததால்தான் இன்று நான் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறேன். கிட்டத்தட்ட 250 படங்களில் நடித்து முடித்துள்ளேன். நான் பாக்கியராஜ் சாரின் மிகப்பெரிய ரசிகன் சித்து +2 என்ற படத்திலும் கூட சிறிய வேடத்தில் நடித்துள்ளேன். அவரது மகன் சாந்தனு நடிக்கும் முருங்கைகாய் சிப்ஸ் படத்தில் சிறிய சப்போர்ட்டிங் ரோல் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது, சாந்தனு எத்தனை படம் நடித்தாலும் மீண்டும் மீண்டும் அவருடன்  நடிக்க தயார்” என கூறியுள்ளார்.




முருங்கைகாய் சிப்ஸ் படத்தில் சாந்தனு மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் லீட் ரோலில் நடிக்க பாக்கியராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கியுள்ளார்.வடிவேலுவின் வெற்றிடம் பல இளம் காமெடி நடிகர்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதாக அமைந்தது. அவர்களுள் யோகி பாபுவும் ஒருவர். தமிழ் சினிமாவில் பல இயக்குநர்கள் யோகி பாபுவின் கால்ஷீட்டிற்காக காத்துருக்கின்றனர், அதே சமயம் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடியனாகவும் , சில படங்களில் கதாநாயகனாகவும் ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக  தர்ம பிரபு, மண்டேலா  போன்ற சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாலிவுட்டில் வெளியான அந்தாதூன் படத்தின், தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள அந்தகன் படத்தில் நடித்து வருகிறார்.