நடிகர் யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் கோயில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 


தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வருபவர் யோகி பாபு. நீண்ட காலமாக வாய்ப்புக்காக போராடிய அவருக்கு அமீர் நடிப்பில் வெளியான யோகி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த யோகிபாபு தனது திறமையால் கலகலப்பு, சூது கவ்வும், அட்டக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார். யோகி பாபுவின் காமெடிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக களம் காண ஆரம்பித்தார்.


 






அந்த வகையில் இவர் நடித்த சிவகார்த்திகேயனின் மான் கராத்தே, ரெமோ, ஐஸ்வர்யா ராஜேஷின் காக்கா முட்டை, அஜித்தின் வேதாளம், விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை, விஜயின் மெர்சல், நயன் தாராவின் கோலமாவு கோகிலா, விசுவாசம், பிகில் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. பிஸியாக நடித்துக் கொண்டிருந்த யோகிபாபு ஒரு கட்டத்தில் தர்மபிரபு, மண்டேலா உள்ளிட்ட படங்களில் கதையின் நாயகனாகவும் களம் இறங்கினார். 


 






இதில் மண்டேலா திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அந்தப்படத்திற்கு சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த வசனம் ஆகிய பிரிவுகளில் தேசிய  விருதுகள் அறிவிக்கப்பட்டன. அண்மையில் இவரது நடிப்பில் வெளியான  ‘வீட்ல விசேஷம்’ ‘யானை’ உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ஆன்மீகத்தின் மீது அதிகம் ஈடுபாடு கொண்ட யோகிபாபு பல கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கம். குறிப்பாக அம்மன் கோயில்களுக்கு அதிகமாக செல்லும் அது தொடர்பான புகைப்படங்களையும் சமூகவலைதளத்தில் வெளியிடுவார். 


 






அந்த வகையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்தப்போட்டோ மலேசியாவில் உள்ள பச்சையம்மன் கோயில் புகைப்படம் ஆகும்.


 






நேற்று அங்கு கும்பாபிஷேகம் நடந்தது. இந்த விழாவில் ஏராளமான மலேசிய தமிழர்கள் கலந்து கொண்டனர்.