திருவண்ணாமலை அன்னபூரணி அரசு அம்மா, தினந்தோறும் அருளாசி என்கிற தீட்சை வழங்குவதில் வல்லவர். போஸ்புக்கில் மணிக்கு ஒருமுறை வழங்கப்படும் அருளாசியில் இன்றைய தினம், மனிதனின் சுதந்திரம் பற்றி பேசியுள்ளார். இந்திய நாடு தனது 75வது சுதந்திர தினத்தை நிறைவு செய்து கொண்டாடி தீர்த்த நிலையில், சுதந்திரம் பற்றி, நீங்கள் அறியாத, நாங்கள் அறியாத, ஏன் அறிவியலே அறியாத பல தகவல்களை பகிர்ந்துள்ளார் அன்னபூரணி அரசு அம்மா. இதோ அவரது வீடியோ அறிவுரையில் கூறிய கருத்துக்கள்...


 


‛‛மனிதனின் சுதந்திரம் எவ்வளவு தூரம்னா... மனிதன் சுதந்திரம் சுதந்திரம்னு பேசுறான். சுதந்திரமானவன்னு சொல்றான்; ஆனால், அவன் தலையில் வளரும் முடியை கூட அவனால் எதுவும் செய்ய முடியாது. இது தான் அவனோட சுதந்திரம். ஆனால், எல்லாம் தெரிந்த மாதிரியும், எல்லா சுதந்திரமும் பெற்ற மாதிரி பேசிட்டு இருக்கான். உங்களுக்குள்ள ஹார்ட் ஃபீட் துடிச்சுட்டு இருக்கு; ரத்த ஓட்டம் போயிட்டு இருக்கு, உச்சம்தலையில் இருந்து உள்ளங்கால் வரை செல்கள் அனைத்தும் இயங்கிட்டு இருக்கு.


கிட்னியாகட்டும், லங்க்ஸ் ஆகட்டும், நரம்புகளாட்டும், எலும்புகளின் வளர்ச்சியாகட்டும், ரத்த ஓட்டமாகட்டும், நகமாகட்டும், முடியாகட்டும் இந்த மாதிரி, உங்களை யாருன்னு நீங்க நெனச்சிட்டு இருக்கீங்களோ, உங்க உடலின் இயக்கங்களை கட்டுப்படுத்த முடியதா அளவிற்கு சுதந்திரம் இல்லாதவராக இருக்கீங்க. அப்படி சுதந்திரம் உள்ளவராக நீங்கள் இருந்தால், உங்கள் இதயத்துடிப்பை கட்டுப்படுத்தும் சக்தி உங்களிடம் இருக்க வேண்டும். ரத்த ஓட்டத்தை இயக்கும் தன்மை உங்களிடம் தான் இருக்க வேண்டும். உங்களின் எல்லா வளர்ச்சியும், உங்களின் அடிப்படையில், உங்களால் இயக்கப்படுவதாக தான் இருக்க வேண்டும். 


அப்படி இருந்தால் தான் , நீங்கள் சுதந்திரமான ஒருவராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால் இது எதுவுமே உங்களிடம் இல்லை. உங்கள் இயக்கங்கள் எதையுமே உங்களால் கட்டுப்படுத்த முடியாது. உங்க உடம்பில், ஒவ்வொரு நிகழ்வுகளும், ஒரு கனப்பொழுது நகர்ந்துட்டே இருக்கு . அதை கட்டுப்படுத்தவோ, அதை மாற்றி அமைக்கவோ உங்களால் முடியாது. உங்க முக அமைப்பு கூட, நீங்கள் தேர்ந்தெடுத்த ஒன்று அல்ல. உங்கள் இயக்கம் அனைத்தும், உங்களை மீறி நடந்துட்டு இருக்கு. 



அதாவது ஒரு சக்திக்கு உட்பட்ட நடந்துட்டு இருக்கு. இதுக்கு உங்களுக்குள் நடக்கும் மாற்றங்களே ஆதாரம். இதில் நீங்கள் சுதந்திரமா இருக்கிறதா நெனச்சிட்டு இருக்கீங்க. ஒரு சக்திக்கு அடிமைப்பட்டு தான், நீங்க இருக்கிங்க. அந்த சக்தி இந்த பூமியில் உங்களை எத்தனை நாள் வெச்சிருக்கோ, அத்தனை நாள் தான் இந்த பூமியில் இருக்க முடியும் . ஒரு புல்லை கூட உங்களால் உருவாக்க முடியாது. அது தான் உங்கள் சுதந்திரம். என்ன செய்வீங்கன்னா... ஒரு பொருளில் இருந்து இன்னொரு பொருளாக மாற்றுவீர்கள். அவ்வளவு தான். ஒரு பொருளில் இருந்து இன்னொரு பொருளா, அதிலிருந்து மற்றொரு பொருளா மாற்றுவீங்க. அது தான் உங்க அறிவியல். ஆனால் அதன் மூலம் இயற்கை சம்மந்தப்பட்ட மூலம். எதுவும் உங்களுக்கு கண்டுபிடிப்பு இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்,’’
என்று அந்த வீடியோவில் அன்னபூரணி அரசு அம்மா பேசியுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண