யோகி பாபு பந்துகளை பந்தாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  


தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வருபவர் யோகி பாபு. நீண்ட காலமாக வாய்ப்புக்காக போராடிய அவருக்கு அமீர் நடிப்பில் வெளியான யோகி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த யோகிபாபு தனது திறமையால் கலகலப்பு, சூது கவ்வும், அட்டக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார். யோகி பாபுவின் காமெடிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக களம் காண ஆரம்பித்தார்.






அந்த வகையில் இவர் நடித்த சிவகார்த்திகேயனின் மான் கராத்தே, ரெமோ, ஐஸ்வர்யா ராஜேஷின் காக்கா முட்டை, அஜித்தின் வேதாளம், விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை, விஜயின் மெர்சல், நயன் தாராவின் கோலமாவு கோகிலா, விசுவாசம், பிகில் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. பிஸியாக நடித்துக் கொண்டிருந்த யோகிபாபு ஒரு கட்டத்தில் தர்மபிரபு, மண்டேலா உள்ளிட்ட படங்களில் கதையின் நாயகனாகவும் களம் இறங்கினார். இதில் மண்டேலா திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.






 


தற்போது விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பீஸ்ட், விஷாலின் வீரமே வாகை சூடும் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் யோகி பாபுவின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.