விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களிலும், சீரியல்களிலும் ஒரு ரவுண்டு வந்துகொண்டிருக்கிறது. விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரையின் நிகழ்ச்சி ப்ரோமோ ஒன்று சக்கைபோடு போடுகிறது இன்ஸ்டாவில்.

Continues below advertisement

அந்த ப்ரோமோவில், ”வீட்டுல ஆசையா யார்கிட்டயாவது கேட்டோ, அல்லது சமையல் நிகழ்ச்சியைப் பாத்தோ ஏதோ ஒரு டிஷ் பண்ணிக் கொடுத்திருப்பாங்க. என்ன டிஷ் அது? எவ்வளவு கேவலமா இருந்தது” என போட்டியாளர்களைக் கேட்டார் மாகாபா. அதில் கிருத்திகாவின் கணவர், க்ரித்திகா செய்த புடலங்காய் டிஷ்ஷை சுட்டிக்காட்டி, உப்பை கொட்டிட்டாண்ணே. கேவலமா இருந்தது என்றார். உடனே சொரணை வரட்டும்னு போட்டேன்னு ஒரு போடு போட்டார் கிரித்திகா.

அடுத்த கிக்கிபிக்கி இதுதான். மைனா நந்தினியின் கணவர் சொன்ன டிஷ் என்ன தெரியுமா? மையோனீஸ். “மையோனீஸை முட்டைக் கருவில செஞ்சிட்டான்னு சொல்ல, மைனா மஞ்சள் கரு எனத் திருத்தினார் (ரெண்டும் ஒன்னுதானே) வாயில வைக்க முடியல. தந்தூரி சிக்கனெல்லாம் கொட்டியாச்சு. அந்த நாய் வந்து சாப்பிட்டு செத்துப்போச்சு” என்றார். 

Continues below advertisement

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைக் காண..