இயக்குநர் ராம்
தமிழ் சினிமாவின் தனித்துவமான கதைசொல்லி இயக்குநர் ராம் . கற்றது தமிழ் படத்தின் மூலமாக தமிழ் சமூக பரப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இயக்குநர் ராம் தொடர்ந்து தங்கமீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். உலகமயமாக்கல் அதன் விளைவாக தனுமனிதர்களின் வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் நெருக்கடிகள், தனிமனித அகத் தேடல்களை இவரது கதைகள் மையமாக கொண்டிருப்பவை. தற்போது இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் படம் ஏழு கடல் ஏழு மலை (Yezhu Kadal Yezhu Malai).
யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வி ஹவுஸ் ப்ரோடக்ஷன் சார்பாக சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். எழுத்தாளர் நரணின் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் க்ளிம்ஸ் தற்போது வெளியாகியுள்ளது.
‘ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் 53 வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.
ராம் இயக்கத்தில் கடைசியாக பேரன்புத் திரைப்படம் 2018 ஆண்டு வெளியானது . இதனைத் தொடர்ந்து தற்போது சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஏழு கடல் ஏழு மலை படத்திற்காக ராம் ரசிகர்கள் மிக ஆர்வமாக காத்திருக்கிறார்கள். தற்போது வெளியாகி இருக்கும் இந்தப் படத்தின் க்ளிம்ப்ஸில் நிவின் பாலி காதலைப் பற்றிய மிக அழகான ஒரு வசனத்தில் இருந்து தொடங்குகிறார். ஒருவரை விட்டு செல்வதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம் ஆனால் ஒருவருடன் சேர்ந்து செல்வதற்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும் . அதுதான் காதல். நிவின் பாலி , சூரி , அஞ்சலி என மொத்தம் மூன்றே கதாபாத்திரங்கள் நடித்து முழுக்க முழுக்க ரயிலில் நடைபெறும் கதையாக இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
ஒரு பெண்ணை தன் கனவுக் காதலை விவரித்துக் கொண்டே வரும் நிவின் பாலி தனக்கு 8 ஆயிரத்தை விட அதிக வயதாகிறது என்று நிவின் பாலி சொல்ல திடீரென்று இந்தப் படத்தைப் பற்றிய பல புதிய அனுமானங்கள் உருவாகின்றன. இதுவரை தன்னுடைய படங்களின் வழி உலகமயமாக்கள். தனிமனித நெருக்கடிகளை தன்னுடைய கதைகளில் அடிநாதமாக பேசிவந்த ராம் இந்த முறை முழுக்க முழ்க்க காதலை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளது