இயக்குநர் ராம்


தமிழ் சினிமாவின் தனித்துவமான கதைசொல்லி இயக்குநர் ராம் . கற்றது தமிழ் படத்தின் மூலமாக தமிழ் சமூக பரப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இயக்குநர் ராம் தொடர்ந்து தங்கமீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். உலகமயமாக்கல் அதன் விளைவாக தனிமனிதர்களின் வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் நெருக்கடிகள், தனிமனித அகத் தேடல்களை இவரது கதைகள் மையமாக கொண்டிருப்பவை. ராமின் படங்கள் குறித்து கருத்து வேறுபாடுகள் இருப்பவர்களும் நேர்காணலில் அவரது உரையாடல்களால் கவரப் படுகிறார்கள்.  தற்போது இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் படம் ஏழு கடல் ஏழு மலை. 


 நிவின் பாலி , அஞ்சலி  , சூரி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.  இதுவரை இப்படத்தின்  க்ளிம்ஸ் வீடியோ மற்றும் இரு பாடல்கள்  வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. சர்வதேச திரைப்பட விழாவான ராட்டர்டாம் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப் பட்டு பாராட்டுக்களைப் பெற்றது.






பிறந்தநாள் காண்டும் ராம் நிவின் பாலி






இன்று இயக்குநர் ராம் மற்றும் நடிகர் நிவின் பாலி ஆகிய இருவரும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள்.இதனை முன்னிட்டு ஏழு கடல் ஏழு மலை படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. 


ஏழுகடல் ஏழு மலை படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. இப்படம் தவிர்த்து நடிகர் மிர்ச்சி விவாவை வைத்து ராம் மற்றொரு படத்தை இயக்கியுள்ளார்.