இந்தாண்டு முடியப் போகிறது. Binge Watch அளவிற்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வெப் தொடர்கள் ஓ.டி.டி.யில் வெளியாகின. அதில் சிறந்தவற்றை பற்றிய தொகுப்பு இது. இந்த வாரம் என்ன பார்க்கலாம்? என்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும். மத்தம், தி மார்டன் லவ், அயலி, லேபிள் என லிஸ்டை கொஞ்சம் செக் பண்ணுங்க..


அயலி


 கடவுள் நம்பிக்கை, சமூகத்தின் பழக்கவழக்கங்கள் என்ற சங்கிலியை உடைத்து வெற்றி நடை போடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக வைத்து வெளியான கதை 'அயலி'. பெண்களை அடிமைப்படுத்த தெய்வ வழிப்பாட்டின் வழியாக உருவான கலாச்சார,பண்பாட்டு விழுமியங்களை சரியானதில்லை என்று சுட்டிக்காட்டி சிந்திக்க வைக்கும் ஒரு இணை தொடர் இயக்குநர் முத்துக்குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் லிங்கா, சிங்கம்புலி, அனுமோல், மதன், அபி நக்ஷத்திரா, லவ்லின் சந்திரசேகர் உள்ளிட்டோர் சிறப்பான தங்களது பங்களிப்பை வழங்கியிருந்தனர்.


"உங்க குடும்ப கௌரவத்தை ஏன் எங்க காலுக்கு இடையில தேடுறீங்க?", "அப்படி குடும்ப மானம் முக்கியம்னா, அதை நீங்களே தூக்கிச் சுமக்கவேண்டியதுதானே? அதை ஏன் பொம்பளைங்கக் கிட்ட தர்றீங்க?" போன்ற வசனங்கள் சென்சிபிளானவை. பாரட்டுக்கள். ஜீ பை ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. 


மத்தகம்


துப்பறியும் கதை பிடிக்கும் என்பவர்களுக்கு மத்தகம் நல்ல தேர்வு. கொலை நடக்கிறது. அதை பற்றிய துப்பறியும் திரைக்கதை. க்ரை த்ரில்லர் என்பது பழைய வகையாக இருந்தாலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான இந்த வெப் சீரிஸ் நல்ல அனுபத்தை தரும். கேங்கஸ்டர் கதை. கேங்ஸ்டர் படாளம் சேகர் (மணிகண்டன்) இறந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், அவர் மறைவாக வாழ்ந்து வருவதாக தகவல் காவல் துறைக்கு கிடைக்கிறது.


பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டும் வரும், பல குற்றங்களுக்கு காரணமான படாளம் சேகரை கண்டுபிடிக்க விசாரணையில் ஈடுபடும் அஷ்வத் தலைமையிலான காவல் துறையினருக்கு எதிர்பாராத பல அதிர்ச்சி தகவல்கள் காத்திருக்கின்றன. இந்நிலையில், இறுதியில் படாளம் சேகரை  நெருங்கினாரா? இல்லையா? என்பது ‘மத்தகம்’ சீரிஸின் கதை. ‘கிடாரி’ படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ளார். விறுவிறுப்பான நகரும் வெப் சீரீஸ்.


தி மாடர்ன் லவ் சென்னை


அமேசான் ப்ரைமில் வெளியான ‘தி மாடர்ன் லவ் சென்னை’ ஆந்தாலஜி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. நகர வாழ்க்கையில் காதல் அதில் ஏற்படும் சிக்கல்கள் என உணர்வுரீதியிலாக சிலவற்றை முயற்சித்திருக்கிறது. பாலாஜி சக்திவேலின் ‘இமைகள்'.  கிருஷ்ணகுமார் ராம்குமாரின் ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கற எமோஜி'., தியாகராஜன் குமாரராஜா ’நினைவோ ஒரு பறவை’,  ராஜுமுருகனின் ‘லாலாகுண்டா பொம்மைகள்'. பாரதிராஜா ’பறவைக் கூட்டில் வாழும் மான்கள்’,  அக்‌ஷய் சுந்தரின் 'மார்கழி'. ஆறு எபிசோட்கள். ஆறும் ஒவ்வொரு உணர்வை கடத்தும் என்பது நிச்சயம்.


கணவர் -மனைவி இடையே மகிழ்ச்சி இல்லை. தன் கணவருக்கு மகிழ்ச்சியில்லை என்பதை தெரிந்துகொண்ட மனைவி, அவருக்கு விவாகரத்து கொடுத்து கணவரின் மனதிற்கு பிடித்த இன்னொருவருடன் அவரையும் இரண்டு குழந்தைகளையும் விட்டுச்செல்ல முடிவு செய்கிறார் என்பது ’பறவைக் கூட்டில் வாழும் மான்கள்’..


Scoop


நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான வெப் சீரிஸ் ‘ஸ்கூப்’. ஸ்கேம் 1992 வெப் சீரிஸின் மூலம் கவனம் ஈர்த்த ஹன்ஸல் மேத்தா இயக்கிய தொடர் இது.மும்பையின் பிரபல கேங்ஸ்டர் சோட்டா ராஜனுடன் இணைந்து கிரைம் நிருபர் ஜே டே என்பவரை கொன்றதாக ஊடகவியலாளர் ஜின்கா வோரா கடந்த 2011-ல் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லையென்று 2018-ல் மும்பை கோர்ட் அவரை விடுதலை செய்தது. வோரோ எழுதிய ’Behind Bars in Byculla: My Days In Prison’ புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டது ‘ஸ்கூப்’. க்ரைம் த்ரில்லர் பிடிக்கும் என்பவர்களுக்கு இது ஃபீஸ்ட் ஆக அமையும். விறுவிறுப்பான ஆறு எபிசோட்கள் அமர்களமாக இருக்கும்.


தி ரெயில்வே மென் (The Railway Men)


நெடிஃப்ளிக்ளில் வெளியான வெப் சீரிஸ் தி ரெயில்வே மென். போபால் விஷ வாயு கசிவு குறித்து வெளியானது. ஒரு பெரும் அழிவின் வலியையும் வேதனையையும் பற்றி பேசியிருந்தது. முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் குறித்து பேசியிருந்தது. 15,000-க்கும் மேற்பட்ட மக்களின் உயிரைப் பறித்த உலகின் மோசமான தொழிற்சாலை பேரிழிவின் பின்னணி அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை காட்சிப்படுத்தியிருக்கிறது.  ‘விஷ வாயு போயிடுச்சு; ஆனாலும் மாஸ்க் போட்டு தான் வாழ்றோம்’ போன்ற வசனங்கள் கவனம் மனதில் நின்றன. விஷவாயுவால் ஏற்பட்ட தாக்கம் தலைமுறையாய் தொடர்வது உள்ளிட்ட முக்கியமான விசயங்களை பேசியிருந்தது.


விஜய் சேதுபதியின் 'ஃபார்ஸி' (Farzi)


நடிகர் விஜய் சேதுபதியுடன், பாலிவுட் நடிகர்ஷாகித் கபூர்இணைந்து நடித்திருக்கும் 'ஃபார்ஸி' வெப் சீரிஸ். அமேசான் ப்ரைமில் வெளியானது. இதில் விஜய் சேதுபதி, ஷாஹித் கபூர் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஃபேமிலி மேன் வெற்றிக்குப் பிறகு, ராஜ்டிகே இயக்கிய வெப் சீரிஸ்..8 எபிசோட்கள் கொண்ட க்ரைம் த்ரில்லர். ஜாலியா பாருங்க.