Unni Mukundan tweet about Samantha : ஆக்‌ஷன், எமோஷன் எந்த காட்சியானாலும் சிக்ஸர் அடித்த சமந்தா... 'யசோதா' நடிகர் வெளியிட்ட ட்வீட் 

நடிகை சமந்தாவின் நடிப்பில் வெளியாக தயாராகவுள்ள திரைப்படம் 'யசோதா'. அவருடன் இணைந்து நடித்த நடிகர் உன்னி முகுந்தன் 'யசோதா' திரைப்படத்தில் நடிகை சமந்தாவின் அர்ப்பணிப்பு குறித்து ட்வீட் செய்துள்ளார்.

Continues below advertisement

 

Continues below advertisement

நடிகை சமந்தா தற்போது  'மயோசிடிஸ்' எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைந்து சகஜமான நிலைக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்களும் பல திரை பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள். அந்த வகையில் நடிகை சமந்தா நடித்துள்ள 'யசோதா' திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்த உன்னி முகுந்தன் நடிகை சமந்தாவை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போஸ்டை பகிர்ந்துள்ளார். 

 

உன்னியின் ட்வீட் என்ன ?
 
உன்னி முகுந்தன் தனது ட்விட்டரில் "கடின உழைப்பும் மிகுந்த அர்ப்பணிப்பும் கொண்ட நடிகை சமந்தா, சண்டை, ஆக்‌ஷன் மற்றும் எமோஷன் காட்சிகளில் நடிப்பதற்காக தன்னை வெகுவாக தயார்படுத்திக்கொண்டார். 'யசோதா' திரைப்படத்தில் அவரின் நடிப்பு அபாரமாக இருந்தது. பார்வையாளர்களின் ரியாக்ஷன் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறது" என்று பதிவிட்டு யசோதா படத்தில் சமந்தாவுடன் நடித்துள்ள காட்சிகளின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் உன்னி முகுந்தன். 

 

 

திரில்லர் திரைப்படம் : 

ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்  தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யசோதா’.  ஹரி ஷங்கர் மற்றும் ஹரீஷ் நாராயணன் இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் ஒரு திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் செப்டம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. நவம்பர் 11ம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது 'யசோதா'.  

 

 

கடுமையாக உழைத்த சமந்தா :

கர்ப்பமாக இருக்கும் சமந்தா எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்தப்படத்தில், சமந்தா ஆக்‌ஷன் தொடர்பான காட்சிகளில் மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருந்தார். சமீபத்தில் அவர் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்த மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கண்களை விரிய செய்தது. இப்படத்திற்காக அவர் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். இப்படம் நடிகை சமந்தாவின்  திரை வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமையும் என்பது நிச்சயம். விரைவில் நடிகை சமந்தா உடல் நலம் தேறி இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பது தான் அவரது ரசிகர்களின் பிராத்தனை. 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola