இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த். துருவங்கள் 16, கவலை வேண்டாம் படங்கள் மூலமும் கொஞ்சம் அறியப்பட்டார். இவர் சமூக வலைதளத்தில் தன்னிடம் மனதைக் காயப்படுத்தும் கேள்வியைக் கேட்ட நபருக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.


யாஷிகா ஆனந்த், இவர் ஒரு பஞ்சாப் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் படித்து, வளர்ந்தது எல்லாம் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு நகரில் தான். மாடெலிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமான இவர், 2015-ஆம் ஆண்டு சந்தானம் நடித்த இனிமேல் இப்படித்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் இவரால் அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முழுவதுமாக செல்ல இயலாததால், இவரின் கதாபாத்திரம் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பின்னர் 2016-ஆம் ஆண்டு ஜீவா நடித்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்தார்.


அதே ஆண்டு, துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்தப் படங்கள் எல்லாம் அவரைப் பெரிதாக அடையாளப் படுத்தவில்லை. இந்நிலையில் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு வந்தது. விஜய் டிவியில் 2018-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீஸ்ஸன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்றார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி சீஸன் 10-ல் நடுவராக பங்கேற்றார். திரைப்படங்களில் சீரியல்களில் அப்படி இப்படி தலை காட்டினாலும் 2018-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார். அண்மையில் விபத்து ஒன்றில் சிக்கி உயிர்பிழைத்து மீண்டு வந்துள்ள யாஷிகா தற்போது மீண்டும் சினிமாக்களில் கமிட் ஆகி வருகிறார். யாஷிகா ஆனந்த் எப்போதுமே சமூக வலைதளங்களில் பரபரப்பாக இயங்கக் கூடியவர். ஃபோட்டோ, வீடியோ, போஸ்ட், ரசிகர்களுடன் கேள்வி, பதில் நேரம் என்று தன்னை பிஸியாக லைம் லைட்டில் வைத்திருப்பார் யாஷிகா.




இந்நிலையில், அண்மையில் இணையதளத்தில் சேட்டில் இருந்த யாஷிகாவிடம் விஷமம் பிடித்த நெட்டிசன் ஒருவர், "விபத்தில் தோழியைக் கொன்ற பிறகு எப்படி இருக்கிறீர்கள்" என வினவியிருந்தார். அதற்கு யாஷிகா ஆனந்த், " நான் குடிக்கவில்லை, அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது எனக்கு சுயநினைவு இல்லை, மருத்துவமனை ரிப்போர்ட்டில் நான் குடித்ததாக இல்லை. ஒருவரை பற்றி பேசும்முன் தெளிவாக எல்லா விஷயங்களையும் தெரிந்துகொண்டு பேச வேண்டும், வதந்தியை பரப்ப வேண்டாம்" என பதில் கூறியுள்ளார்.


ட்விட்டரில் அவர் கொடுத்த பதிலடியையும் சிலர் வரவேற்று கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்ளேமர் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றுவதில் உள்ளூர் உர்ஃபி ஜாவேத் எனக் கூறலாம். அந்த அளவுக்கு படு கிளாமர் இல்லாவிட்டாலும் கூட அம்மணி தாராளம் தான் எனக் கூறுகின்றனர் ரசிகர்கள்.