நிரூப்புக்கும் உங்களுக்கும் எப்போது கல்யாணம்? இதுப்போன்ற எண்ணம் எதுவும் இல்லை எனவும், நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம் என இன்ஸ்டாகிராம் மூலம் தனது ரசிகர்களுக்குப்பதிலளித்துள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.
துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். தன்னுடைய கிளாமரான தோற்றத்தின் மூலம் ரசிகர்கள் பலரை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். இவரும் பிக்பாஸ் சீசன் 5 மற்றும் தற்போது பிக்பாஸ் அல்டிமேட்டில் ஒரு போட்டியாளராக இருக்கும் நிரூப் இருவரும் காதலித்து வந்த நிலையில் சில காரணங்களாக பிரிந்த சம்பவம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்து வந்த டாஸ்கின் போது, நிரூப் நான் இந்த நிலையில் இருப்பதற்கு யாஷிகா தான் காரணம் எனவும் அவருக்கு நன்றிகள் எனவும் கூறியிருந்தார். இதோடு பிக்பாஸ் ஒவ்வொரு சீசனிலும். ப்ரீஸ் டாஸ்கின் போது, போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகைப் புரிவார்கள். அப்படி தான் நிரூப் பங்கேற்ற சீசனில் யாஷிகா வந்த போது, இருவரின் காதல் வெளிப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. இதனையடுத்து இருவரும் ஹாட் டாப்பிக்காக இருந்தது.
இந்நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக யாஷிகா தனது நண்பர்களுடன் புதுச்சேரி சென்று சென்னை திரும்பிய போது கார் விபத்து ஏற்பட்டது. இதனால் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட யாஷிகா தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். இதோடு இந்த விபத்தில் தோழி பவானி உயிரிழந்த சம்பவம் அவரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. இதனால் சில காலம் சோஷியல் மீடியா பக்கம் வராமல் இருந்த இவர் தற்போது உடல் நலம் தேறிய நிலையில் மீண்டும் ஆக்டிவ் ஆகிவிட்டார்.
இந்நிலையில் தான் யாஷிகா ஆனந்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர்., உங்களுக்கும் நிரூப்க்கும் எப்போது என ரசிகர் ஒருவர் கேள்வியெழுப்புள்ளார். இதற்கு பதிலளித்த யாஷிகா, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்தான். தற்போதைக்கு யாரையும் திருமணம் செய்யும் எண்ணம் எனக்கில்லை என தெரிவித்துள்ளார். இதே போல் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் யாஷிகா. இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
இதற்கிடையில் தான் பிபி அல்டிமேட் வீட்டில், உங்களுக்கு இங்க என்ன வேணும் டாஸ்கின்போது, அபிராமி , நிரூப் ஐ பார்த்து உங்கள் முன்னாள் காதலியும் வீட்டுக்கு வருகிறார் என்று கேள்விப்பட்ட போது உங்களது மனநிலை எப்படி இருந்தது? என கேட்டார். அதற்கு பதிலளித்த நிரூப், அபிராமியைப் பார்த்து நீங்கள் தான் என்னுடைய முன்னாள் காதலி என எல்லோர் முன்பும் போட்டு உடைத்தார். இதைக்கேட்ட ரசிகர்கள் திகைத்துப்போய் உள்ளனர். இதனையடுத்து தான் யாஷிகாவுக்கு முன்பே நிரூப் அபிராமியுடன் உறவில் இருந்தது அனைவருக்கும் தெரியவந்துள்ளது. இப்படி ஒரு சூழ்நிலையில்தான் யாஷிகாவும், நிரூப் உடன் உறவிலிருந்து விலகிவிட்டதாக இப்போது தெளிவாகியுள்ளது.