துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம் போன்ற திரைப்படங்களில்  நடித்திருந்தாலும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். தன்னுடைய கிளாமரான தோற்றத்தின் மூலம் ரசிகர்கள் பலரை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.


எப்பொழுதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா, தான் எடுத்துகொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு அசத்துவார். அவரது புகைப்படங்களை பார்க்கவே இங்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இந்நிலையில் ஏற்கெனவே பிக்பாஸில் கலந்துகொண்டு ரசிகர்களை சம்பாரித்துள்ள யாஷிகா தற்போது 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்துகொள்வாரா என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இது குறித்து தற்போது அவரே பதில் அளித்துள்ளார். 


 






இன்ஸ்டா லைவில் பேசிய யாஷிகாவிடம் பிக்பாஸ் அல்டிமேட்டுக்கு அழைத்தார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ஆமாம்.. என்னை பிக்பாஸ் அல்டிமெட்டில் கலந்துகொள்ள அழைத்தார்கள். ஆனால், என்னால் பழையபடி டாஸ்க் செய்யமுடியாது. மேலும், நான் 18 வயசு இருக்கும்போது பிக் பாஸுக்கு போனேன். இப்போது என்னால் ரிஸ்க் எடுக்கமுடியாது என்றார். இதன் மூலம் யாஷிகா பிக்பாஸ் வரமாட்டார் என்பது ரசிகர்களுக்கு தெளிவாகியுள்ளது. 


சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கிய யாஷிகா தற்போதுதான் குணமடைந்து பொது இடங்களில் சுற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






 


ரம்யா பாண்டியன்


பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. கமலுக்கு பதிலாக சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொடங்கியது முதலே பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது எனலாம். தன்னுடைய இரண்டாவது எபிசோடிலே போட்டியாளர்களை கண்டித்து சிம்பு தனது பாணியில் இந்த ஆட்டத்தை ஆரம்பித்தார்.


இந்த நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் ஆட்டம் மேலும் சூடுபிடிக்க உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலே ரசிகர்களை மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாக்குவது எலிமினேஷன் எனப்படும் வெளியேற்றப்படும் சுற்றுதான். இந்த வாரமும் வழக்கம்போல எலிமினேஷன் நடைபெற உள்ளது. இந்த வார எலிமினேஷன் சுற்றில் சினேகன், ஜூலி, சுருதி மற்றும் பாலாஜி முருகதாஸ் இடம்பெற்றுள்ளனர்.  இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் புது எண்ட்ரியாக நடிகை ரம்யா பாண்டியன் உள்ளே வந்துள்ளார்.