பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவிற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அதேபோன்று பல மொழிகளிலும், பல தொலைக்காட்சிகளிலும் ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் கங்கணா ரணாவத் தொகுத்து வழங்க லாக் அப் என்ற ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பலரும் போட்டியாளர்களாக பங்கேற்று தங்களது வாழ்வில் கடந்து வந்த சோதனைகளை பகிர்ந்து வருகின்றனர். இதில் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய பிரபல பேஷன் டிசைனரான சாயிஷா ஷிண்டே பங்கேற்றுள்ளார்.
அவர் தனது சக போட்டியாளர்களிடம் தன் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வை பகிரும்போது, ”நானும் உறவில் இருந்தபோது கடுமையாக தொந்தரவுக்கு ஆளானேன். ஆனால், அது உடலால் ஏற்பட்ட தொல்லை அல்ல. அது மனதால் அனுபவித்த தொல்லை. அவன் என்னை அருவருக்கத்தக்க அளவு உணர வைத்துவிட்டான்.
அவன் என் கதவுக்கு வெளியேயே நின்று காத்துக்கொண்டு இருப்பான். யாராவது உள்ளே இருந்து வருவார்கள். நான் அவனை ஏமாற்றுகிறேன் என்று நினைத்துக்கொண்டு காத்திருப்பான். அவ்வாறு யாராவது பிடித்துவிட்டால், நான் அவனை ஏமாற்றிவிட்டேன் என்று கூறி எனக்கு எதிராக அதைப் பயன்படுத்தலாம் என்று நினைத்தான்.
நான் குளியலறைக்கு குளிக்கச் சென்றால் மாடியில் உள்ள பைப் வழியாக கீழே இறங்கி ஜன்னலை திறந்து ஒளிந்து பார்ப்பான். ஒருவேளை நான் சுய இன்பம் கண்டு கொண்டிருந்தால், அதை எனக்கு எதிராக பயன்படுத்தலாம் என்று அவன் நினைத்தான்.” என்று கூறினார்.
அப்போது, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு பெண் போட்டியாளர் பாயல் ரோஹத்கி உன்னால் ஏன் சுய இன்பம் செய்ய முடியாது என்று கேட்டார். அதற்கு சாயிஷா நான் அவனுடன் உறவு கொள்ள விரும்பாததே அதற்கு காரணம் என்று கூறினார். மேலும், தொடர்ந்து பேசிய சாயிஷா நான் அவன்கூறியதுதான் சரி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், ஒருபோதும் நான் மகிழ்ச்சியாக இருந்ததில்லை. உடலால் நான் ஒரு போதும் மகிழ்ச்சியாகவே இருந்ததில்லை.
நான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளருடன் உடலுறவு கொள்ளும் ஒரு பெண்ணாக உணர்ந்தேன். உள்ளே பெண்ணாகவும், வெளியில் தன்பாலீர்ப்பாளரோடு உறவு கொள்வதை போலவும் உணர்ந்தேன்”
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்