‘கேஜிஎஃப்’ திரைப்படத்தின் மூலம் நாடு முழுவதும் பிரபலமடைந்து, ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து மாஸ் நாயகனாக உருவெடுத்துள்ளவர் கன்னட நடிகர் யஷ்.

Continues below advertisement

ராக்கி பாயின் குடும்பம்

2018ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம், பிற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி, சத்தமே இல்லாமல் ஹிட் அடித்து, இந்தியாவின் சிறந்த டான் படங்களில் ஒன்றாகவும், கல்ட் க்ளாசிக்காகவும் உருவெடுத்துள்ளது.

Continues below advertisement

படத்தில் ராக்கி பாயாக வாழ்ந்த  யஷ் கன்னட சினிமா தாண்டி, நாட்டின் இண்டு இடுக்குகளிலும் உள்ள ரசிகர்களை எல்லாம் சலாம் சொல்ல வைத்து அனைவரது மனங்களிலும் இடம்பிடித்தார்.

2007ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் ’ஜம்படா ஹுடுகி’ எனும் படத்தில் அறிமுகமான யஷ், சக நடிகையான ராதிகா பண்டிட்டை காதலித்து 2016ஆம் ஆண்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆர்யா என்ற பெண் குழந்தையும் (வயது 3) யாத்ரவ் (வயது 2) என்ற மகனும் இவர்களுக்கு உள்ளனர்.

குழந்தைகள் வீடியோ

தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை யஷ்ஷூம் ராதிகாவும் தொடர்ந்து பகிர்ந்து வரும் நிலையில், இவர்களின் குடும்பப் புகைப்படங்கள் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இணையத்தில் உருவாகியுள்ளது.

இந்நிலையில், ராதிகா பண்டிட் தற்போது பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. தங்கள் மகள் மகன் இருவரும் கொஞ்சி விளையாடி மகிழும வீடியோ ஒன்றை நேற்று முன் தினம் (ஏப்ரல்.10) உடன் பிறந்தவர்கள் தினத்தை முன்னிட்டு ராதிகா பகிர்ந்திருந்தார்.

தங்கள் வீட்டு ஹோம் தியேட்டர் அறையில் குழந்தைகள் ஆனை சவாரி செய்து விலையாடும் வீடியோவை ராதிகா பகிர்ந்துள்ள நிலையில், இந்த வீடியோ 3 லட்சத்துக்கும் மேல் லைக்ஸ் அள்ளி இன்ஸ்டாவில் ஹிட் அடித்துள்ளது.

கன்னடம் சொல்லிக்கொடுங்கள்

மேலும் அழகிய கமெண்டுகளை ஒருபுறம் இந்த வீடியோ குவித்து வரும் நிலையில், மற்றொருபுறம், வித்தியாசமான எதிர்ப்புகள் இந்த வீடியோவுக்கு எழுந்து வருகின்றன.

ராதிகா தொடர்ந்து தன் குழந்தைகளின் வீடியோக்களைப் பகிர்ந்து வரும் நிலையில்,  “இவர்கள் கன்னடம் பேசி நாங்கள் எங்குமே பார்த்ததில்லை, இந்தக் குழந்தைகளுக்கு கன்னடம் சொல்லிக் கொடுத்து பேச வையுங்கள் ராதிகா” என கமெண்ட் செக்‌ஷனில் கன்னடர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கேஜிஎஃப் சீரிஸின் படங்கள் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு யஷ் இதுவரை எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகாத நிலையில், கேஜிஎஃப் 3 படத்தில் யஷ் அடுத்ததாக நடிக்கலாம் எனத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மேலும் இந்த மாதத்தில் யஷ்ஷின் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.