இன்று எழுத்தாளர் சுஜாதா பிறந்ததினம்!


டிரிங்…டிரிங்… டிரிங்…


இதைப் படித்தவுடன் உங்கள் போன் ஒலிக்கிறது என்பது உங்கள் கண்முன் தோன்றும் இல்லையா? ஆம், இப்படி எழுத்து மூலம் காட்சிகளை விவரிப்பதுதான் எழுத்தாளர் சுஜாதாவின் பாணி. அவரின் எழுத்துகளை நீங்கள் வாசித்தால், அது காட்சிகளாக மட்டுமே இருக்கும். கதையில் வரும் சூழலை பெரிதாக மெனக்கெட்டு விவரிக்கும் பாங்கு சுஜாதா எழுத்துக்களுக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். ஒரு நிகழ்வின் மூலம் அச்சூழலை உணத்திவிடும் வித்தைத் தெரிந்தவர், சுஜாதா. நச்சென்று ஒன்றை சொல்லும் விதம். சுருக்கமாகவும், தெளிவாகவும் எழுதுவது சுஜாதாவின் எழுத்துப்பாணி. சுவாரஸ்யமான விவரணைகள் தொடங்கி தமிழில் ஆங்கில வார்த்தை பயன்பாடு என்று இவர் தமிழ் கதை உலகிற்கு நவீன எழுத்துநடையை அறிமுகம் செய்தவர். புனைவு என்றாலும் சரி, அபுனைவு என்றாலும் சரி, அனைத்து மக்களுக்கும் புரியும் வகையில் விஞ்ஞானத்தையும் அறிவியலையும் தமிழில் அறிமுகம் செய்த பெருமை சுஜாதாவையே சாரும். கட்டுரைகள், நாடகங்கள் என இவர் காலம் முழுக்க தனது அயராது எழுத்தாள் வாசகர்களை மகிழ்வித்திருக்கிறார்.


அபுனைவு நூல்களில், ஏன்? எதற்கு? எப்படி? என்ற புத்தகம் அறிவியல் கேள்விகளுக்கு தெளிவாக பதில்கள் அடங்கியதாகும். கற்றதும் பெற்றதும் என்ற நூலும் பிரபலமானது.


புனைவில், பிரிவோம் சந்திப்போம் (இந்தக் கதை ஆனந்த தாண்டம் என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.), போன்ற காதல் கதைகள்,  நைலான் கயிறு’, ‘எதையும் ஒரு முறை’, ‘பேசும் பொம்மைகள்’, ’ப்ரியா’ என கிரைம் கதைகள், ‘நகரம்’உள்ளிட்ட சமூக அவலங்களை அம்பலப்படுத்தும் கதைகள், சினிமாத் துறையில் அடித்தட்டு ஊழியர்களைப் பற்றிய ‘கனவுத் தொழிற்சாலை, என் இனிய இந்திரா, கொலையுதிர் காலம், எப்போதும் பெண், கரையெல்லம் செண்பக பூ,  உள்ளிட்ட பல படைப்புகள் காலம் சென்றும் மனதில் நிற்பவைகள் ஆகும்.


இவரின் துப்பறியும் நாவல்களில் வரும் கணேஷ்- வசந்த கதாப்பாத்திரம் வாசகர்களுக்கு மிகவும், பிடித்தவர்கள். இவர் கதை சொல்லும் பாணி மூலம் தனி முத்திரை பதித்தவர்.


பதின்பருத்தில் ஒரு சிறுகதை மூலம் தன் எழுத்தாற்றலை கண்டறிந்தவர், பின்னர், படிப்பு, வேலை என்று 15 ஆண்டுகளுக்கும் மேலாக எதுவும் எழுதவில்லை. இலக்கியம், நாடகங்கள் என்றிருந்தவர்  தமிழ் சினிமாவுக்கும் தன் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.


சுஜாதாவின் நாவல்களை படமாக்குவது சற்றே எளிதானது என்ற கருத்தும் உண்டு. ஏனெனில், அவர் எழுதும் பாணி சினிமா திரைக்கதை எழுதுவது போல இருக்கும். ரோஜா,இந்தியன், ஆய்த எழுத்து, அந்நியன், பாய்ஸ், முதல்வன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், உயிரே, விசில், கன்னத்தில் முத்தமிட்டால், சிவாஜி தி பாஸ், எந்திரன், வரலாறு, செல்லமே ஆகிய திரைப்படங்களில் இவர் திரைக்கதையும் வசங்களும் எழுதியிருக்கிறார்.


திரைக்கதை எழுவது பற்றி சுஜாதா ஒரு பேட்டியில், திரைக்கு எழுதுவது என்பதே ஒரு முரண்பாடு. மிக நல்ல திரைக்கதை என்பது வார்த்தைகளே அற்ற வடிவம் என்பது என் கருத்து. அது ஓர் அடைய முடியாத ஆதர்சம். வார்த்தைகள் தேவைதான். ஆனால் முதலில் ‘திரை’எழுத்தாளர் கற்றுக் கொள்ள வேண்டியது வார்த்தைகளைக் குறைப்பது. இது பத்திரிகை எழுத்துத் தேவைக்கு நேர் எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார்.


இன்றுவரை திரைப்பட வசனத்தில் சுஜாதா செய்தவைகள் காலம் கடந்து பேசப்படுபவைகள். அப்படி, சுஜாதாவின் பெயர் சொல்லு வசனங்கள் உங்கள் பார்வைக்கு….


 கண்டுகொண்டேன்… கண்டுகொண்டேன்…


மனோகர் செளமியா உரையால் காட்சி…


ஐ லவ் யூ.. உங்கள முதல் முதல பார்த்ததில் இருந்தே, நான் உங்களை நேசிக்க ஆரம்பிச்சிடேன். இப்போ நேராவே கேட்கிறேன்.


உங்கள் மாணவன் பாஸா? ஃபெயிலா? இல்லை ஸ்ட்ரைட்டா டி.சி.யா?


 


இந்தியன்..


"பக்கத்துல இருக்குற குட்டி குட்டி தீவு எல்லாம் முன்னேறிடுச்சு... எப்படினு தெரியுமா?"


"அங்கெல்லாம் லஞ்சம் இல்லை !"


. "அங்கேயும் லஞ்சம் இருக்கு. ஆனா, அங்கெல்லாம் கடமைய விட்டுக் கொடுக்கத்தான் லஞ்சம், இங்க மட்டும்தாண்டா கடமையை செய்யறக்கே லஞ்சம் கேக்குறீங்க" 


.


“என்னோட மனசு, புத்தி இரண்டுமே ஒண்ணுதான்” 


(கிளைமேக்ஸ் சீனில் வரும் டயலாக்)


.


”தான் செய்யறது தப்புனே உறைக்காத அளவுக்கு உங்களுக்கு தப்பு பழகிப்போச்சுடா!”


.


இந்த உலகத்துல இருக்கற எல்லா வழியும் குறுக்கு வழியா மாறிடுச்சு… இது எங்க அப்பாவுக்குப் புரியல!


 


அந்நியன்..


 


”நீங்க சட்டத்தை மீறலாம். நான் சட்டத்தைக் கையில் எடுத்துக்கக் கூடாதா? ”


”தப்பு என்ன பனியன் சைஸா? ஸ்மால், மீடியம், லார்ஜ்னு… விளைவுகளோட சைஸைப் பாருங்க… எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜ்தான்!”


”இரயிலில் சாப்பாடு சரியில்லை, மின்விசிறி சுழலவில்லை.”


“டி.டி.ஆர், – அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க.”



”அட்ஜட்ஸ்ட் பண்ணி பண்ணித்தான் இந்த தேசம் இப்படி இருக்கு…”


 


 


முதல்வன்…


”கடைசில என்னையும் அரசியல்வாதி ஆகிட்டங்களே !”


.


புகழேந்தி- அரங்கநாதன் பேட்டி…


”எதிர்க்கட்சிகாரங்கிட்ட எவ்வளவு பணம் வாங்கினீங்க?”


நீங்க எதிர்கட்சியா இருந்தப்ப எவ்வளவு கொடுத்துருப்பீங்க?”


"Writing was never my career, it was my hobby" என்று சொல்வார்.  உங்களை தொடர்ச்சியாக இயங்க வைப்பது எது என்று கேட்டதற்கு, ‘தெரிந்து கொள்ளும் ஆர்வம்’ என்பது அவரின் பதில். திரையுலகில் இவரின் பங்களிப்பு அளவற்றது.ஒரு திரைப்படத்தில் வசனத்தைக் குறைக்க வேண்டியது தன் வேலை என்பதும்,  சினிமா என்பதே ஒரு கூட்டுமுயற்சி என்பதும் அவர் கருத்து. இதை நன்கு புரிந்தே அவர் செயல்ப்பட்டார் எனலாம். இரண்டு மணி நேரத் திரைப்படத்துக்குப் பத்து பக்கங்களுக்கு மேல் வசனம் இருக்கக் கூடாது என்று இயக்குநர்களிடம் வாதிட்டிருக்கிறார். 


வி மிஸ் யூ, சுஜாதா!