குகேஷ் வெற்றி பெற்றததை அடுத்து அவருக்கு இந்தியாவின் பல்வெறு பகுதிகளில் இருந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது, குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி தங்கள் வாழ்த்துக்களை குகேஷூக்கு தெரிவித்தனர். மேலும் வெற்றி பெற்ற குகேஷூக்கு 11.45 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் குகேஷுக்கு ரூ 5 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார். 


வாழ்த்து தெரிவித்த ரஜினி மற்றும் சிவகார்த்திகேயன் 


உலகம் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் அவரை சந்தித்து தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்கள். 


நடிகர் ரஜினி குகேஷூக்கு பொன்னாடை போர்த்தி ஒரு யோகியின் சுயசரிதை புத்தகத்தை பரிசாக வழங்கினார்.



நடிகர் சிவகார்த்திகேயன் குகேஷை கேக் வெட்டி பாராட்டி கை கடிகாரம் ஒன்றை அவருக்கு பரிசாக வழங்கினார்






 


உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடைப்பெற்றது, இந்த தொடரின் இறுதிப்போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சீன வீரர் டி லிரேனை எதிர்க்கொண்டார். பரபரப்பாக நடந்த இந்தப் போட்டி 14 சுற்று வரை நடந்தது. கடைசி சுற்றில் போட்டியை டிரா செய்ய வேண்டும் லிரேன் போராடினார், ஆனால் குகேஷ் கொடுத்த நெருக்கடியால் லிரேன் 53 வது நகர்த்தலில் பெரிய தவறு ஒன்றை செய்தார். 


இதை பயன்படுத்திக்கொண்ட குகேஷ் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் குறைந்த வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற இளம் வீரர் என்கிற சாதானையை குகேஷ் படைத்தார்.