பெண்கள் இந்த சமூகத்தில் பிரச்சனைககளை சந்திப்பது அவற்றை எதிர்த்து போராடுவது காலம் காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. சமூகத்தில் சந்திக்கும் பிரச்சனைகளை விட அவர் வீட்டில் நடக்கு பிரச்சனைகள் ஏராளம். ஒரு பக்கம் இப்படி இருந்தால், ஒரு பெண்ணை இந்த சமூகம் அவரின் நடத்தை, அவள் அணியும் ஆடைகள், அவளின் பேச்சு இதையெல்லாம் குறித்து இவள் இப்படி தான் என்று முடிவு செய்கிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு பெண் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வீடு திரும்புவதற்குள்  'அப்பாடா' என்று பெருமூச்சை விடுகிறாள்.


ஆனால் பெண்களுக்கு நடக்கும் இந்த அவலங்கள் பெரும்பாலும் பொதுவெளியில் பேசப்படுவதில்லை. இதனை சமீபத்தில்  வந்த படங்கள் சில வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. 


36 வயதினிலேயே


கணவன், குழந்தை, குடும்பத்துக்காக தன் சுயத்தை இழந்து நான்கு சுவர்களுடன் முடங்கி, அதே கணவன், குழந்தையால் ஒதுக்கப்படும் ஒரு பெண், மீண்டும் எப்படி தன்னை தேடி ஒரு பெரிய கவுரவத்தைப் பெறுகிறாள் என்பதுதான் 36 வயதினிலே படம். இந்த படத்தில் வரும் வசனங்கள் அனைத்தும் அழுத்தமானதாக இருக்கும். அதன்படி,


”ஒரு பொண்ணு எதை செய்யாலாம்னு அஞ்சு இருக்கு;எதை செய்யக் கூடாதுன்னு ஐம்பது இருக்கும்...எல்லாருக்கும் பிடித்த அந்த ஐந்து அவ செய்யலாம்...ஆனா நமக்கு பிடித்த அந்த ஐம்பது நம்ம செய்யக்கூடாது...அவ்வோளோதான் சிப்பிள் ஒரு பொன்னோட லைஃப்" என்ற வசனங்கள் அனைவரின் வாட்ஸ் அப் ஸ்டேசிசில் இன்று கூட உள்ளது.


காற்றின் மொழி


திருமணமான பெண் திருமணத்திற்கு பிறகு தனக்கென வாழாமல் தன் குடும்பத்திற்காக வாழும் நிலை ஏற்படுகிறது‌. அவளுக்கென கனவு, ஆசை தொலைந்து போகிறது. திருமணமான பெண்ணுக்கு தனிப்பட்ட ஆசைகள் இருக்கக் கூடாதா… திருமணத்திற்கு பிறகு பெண்ணால் சாதிக்க முடியாதா என்ற கோணங்களில் யோசிக்க வைத்த படம்தான் காற்றின் மொழி. 'வீட்டில் இருக்கிற பொம்பலைங்களுக்கு லீவே கிடையாதா' என்ற வசனங்கள் ரசிகர்களை கைத்தட்ட வைத்தது. 


அருவி 


குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு எச்ஐவி தொற்று பாதிக்கப்பட்டவுடன் அவள் மீதான மதிப்பீடுகளை இந்த சமூகம் அவள் உடல் சார்ந்தே முன் வைப்பது, 'அவ அப்படி இருக்கப் போய்தான்..இப்படி நடந்திருக்கு' என அவளையே குற்றம்சாட்டுவது என பிற்போக்கு எண்ணங்களை வசனங்கள் மூலம் இன்றும் மனத்தில் ஆழமாக பதிந்த படம் தான் அருவி. இதில் இருக்கும் ஒவ்வொரு வசனங்களும் நம் வாழ்க்கைக்கு பொருத்தமானதாக இருக்கும். அதன்படி, "இந்த உலகம் பணக்காரனாக இருந்தா நமல்ல மதிக்கும் இல்லைனா மதிக்காது நம்ம குணம்லாம் யாருக்கும் தேவை இல்லை"  என்ற வசனங்கள் அன்றாட வாழ்க்கையில் நடப்பது போன்று வசனங்கள் அமைந்திருக்கும்.


தரமணி


கணவர் இல்லையெனில் பெண்களை சமூகம் பார்க்கின்ற விதம், நாம் என்ன செய்தாலும் மனைவி ஏற்றுக்கொள்வாள் என்ற ஆணின் கர்வம், மாடலாக இருக்கிறாள் என்ற காரணத்திற்காக அவளை தவறாக மதிப்பீடுவது என்ற கருத்தைகளை எல்லாம் மேற்கோள்ளிட்டு கூறிய படம் தான் தரமணி. இந்த படத்தில் இருக்கும் வசனங்கள் ஒவ்வொன்றும் எதார்த்தை வெளிப்படுத்தும். அதன்படி,  "சிகரெட் குடிக்காத, நீ ஒரு பையனுக்கு அம்மா", நீ கூடத்தான் ஒரு அம்மாவுக்கு பையன்" என்ற வசனங்கள் சமரசமில்லாமல் நம் மனசாட்சியை அறைந்து கேள்வி கேட்கும் விதத்தில் இருக்கும்.


ஜெய ஜெய ஜெய ஜெய ஹே


இந்த சமூகத்தின் ஆணாதிக்க பாசாங்குகளை பிரதிபலிக்கும் கண்ணாடிபோல பெண்கள் அமைதியாக உட்கார்ந்திக்கமாட்டார்கள். அப்படி உட்கார்ந்திருக்க கூடாது என்பதை சுட்டிக்காட்டும் படம் தான் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே. இந்த படத்தில் இருக்கும் வசனங்கள் இந்த சமூகத்தின் யதார்த்தத்கை விளக்குகின்றன. அதன்படி, " நீதி, சமத்துவம், பெண் சுதந்திரம் இவை மூன்றும் தான் ஒரு பெண்ணின் வாழ்க்கை முழுவதும் கிடைக்கணும்" என்ற வசனங்கள் அனைவரையும் சிந்திக்க வைத்தன.


வட்டம்


பெண்ணுக்கான பொருளாதார சுதந்திரத்திற்கான தேவையை விளக்கும் படம் தான் வட்டம். பணம் இல்லாத போது ஒரு பெண் வேறு வழியின்றி ஆணை நம்பியே இருக்க வேண்டிய சூழல் இன்னமும் மாறாமல் இருப்பதை இந்த படம் பதிவு செய்கிறது.  "வயதுக்கு வந்ததுக்கு அப்பறம் நாங்க வாழ்ற வாழ்க்கை எங்களோடது இல்லை" என்ற வசனங்கள் மிகவும் ஆழமானதாக இந்த படத்தில் இருக்கிறது. 


அயலி


கடவுள் நம்பிக்கை, சமூகத்தின் பழக்கவழக்கங்கள் என்ற சங்கிலியை உடைத்து வெற்றி நடை போடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக வைத்து வெளியாகியுள்ள கதை 'அயலி'.  கதையில்  வசனங்கள் கவனம் ஈர்ப்பதோடு, காத்திரமாகவும் இருக்கின்றன. உதாரணமாக, ’முதுகுக்குப் பின்னாடியே பார்த்துட்டு இருந்தோம்னா, முன்னாடி போக முடியாது..! நான் எப்படி இருக்கணும்னு நான்தான் முடிவு பண்ணுவேன்'..! என பிரச்சார நெடி இல்லாமல் வசனங்கள் ஒவ்வொன்றும் தெறிக்க வைக்கின்றன. 


இந்த படங்களின் மூலம் ஒரு பெண் சிறுமியாக, இளம் பெண்ணாக, குடும்பத் தலைவியாக என வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு இன்னல்களை இந்த சமூகத்தில் சந்திக்க நேரிடுகிறது. இப்படி இருக்கும் நிலையில், பெண்களின் பிரச்சனைகளை வெளிப்படையாக மேற்கண்ட படங்கள் பதிவு செய்திருக்கும். இவ்வளவு தான் வாழ்க்கை என்று சலித்து போய் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த படங்கள் எல்லாம் நம்பிக்கையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.