இலங்கையைச் சேர்ந்த இளம்பெண் யோஹானி டி சில்வா  பாடியுள்ள 'மணிகே மாகே ஹிதே' (Manike Mage Hithe) என்னும் சிங்கள பாடல் 140 மில்லியன் பார்வைகளைக் கடந்துச் சென்றுகொண்டிருக்கிறது. 


இன்ஸ்டாகிராம் ரீல், ஃபேஸ்புக் ரீல், யூடியூப் என சமூக வலைத்தளங்கள் பலவற்றிலும் சமீப நாட்களில் நாம் அதிகம் பார்த்திருக்கும் பாடல் 'மணிகே மாகே ஹிதே' தான். பாடல் வெளியாகி சில மாதங்கள் ஆனபோதும் இன்னும் அந்தப் பாடலுக்கான மோகம் குறையவில்லை. இன்னும் பலர் ரீல் செய்வதைப் பார்க்க முடிகிறது. 


தற்போது "மணிகே மகே ஹிதே" பாடலுக்கு ஒரு பெண் அஸ்ஸாமிய பிஹு நடனம் ஆடும் மற்றொரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவைப் பார்த்த பலர் பாராட்டி வருகின்றனர். புடவை அணிந்து அவர் நெளிவு சுழிவோடு ஆடுவது பலரையும் கவர்ந்திருக்கிறது. 






 


அதேபோல கர்ப்பிணியான இன்னொரு பெண்ணும் தனது வளைக்காப்பு  விழாவில் இதே பாடலுக்கு நடனமாடுகிறார்.  “ஃபைனல்லி..என்னுடைய ஸ்பெஷல் நாளில் இந்த ட்ரெண்டை நானும் செய்தேன். இது அம்மா மற்றும் குழந்தை இருவருக்கும் மகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் தருகிறது. எனக்கு மருத்துவ சிக்கல்கள் எதுவும் இல்லை மற்றும் நடனம் ஆடும்போது எந்த சிக்கலும் இல்லை. ஒவ்வொரு கர்ப்பமும் வித்தியாசமானது மற்றும் எந்த வகையான உடற்பயிற்சியையும் செய்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும்” என பதிவிட்டுள்ளார். 
இந்த 2 வீடியோக்களும் வைரல் லிஸ்ட்டில் இணைந்துள்ளன.