நடிகர் விஜய், நடிகை நயன்தாரா, இயக்குனர் அட்லி கம்பினேஷனில் வெளிவந்த திரைப்படம் பிகில். அண்மையில் இத்திரைப்படம் சன் டிவியில் கடந்த மே 9-ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டது. அப்போது 1.2 கோடி பார்வையாளர்களை பிகில் திரைப்படம் கவர்ந்துள்ளதாக BARC நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன..


BARC என்னும் நிறுவனம் ஒவ்வொரு வாரமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் போது - நிமிடத்திற்கு எத்தனை பார்வையாளர்கள் அதனை சராசரியாக பார்வையிடுகிறார்கள் என்ற புள்ளிவிபரங்களை வழங்கும். அதன் அடிப்படையில், கடந்த மே 9-ஆம் தேதி சன் டிவியில் பிகில் திரைப்படம் 4வது முறையாக ஒளிபரப்பான போது 1.2 கோடி பார்வையாளர்கள் சராசரியாக இதனை பார்வையிட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஏற்கனவே பிகில் திரைப்படம் ஒளிபரப்பப்பட்ட போது சராசரியாக பார்வையிட்ட பார்வையாளர்கள் எண்ணிக்கை...


முதல் முறை - 16473000
2வது முறை - 16936000
3வது முறை - 10733000


தற்போது 4வது முறை - 12026000


இதனை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள் நடிகர் விஜயின் தீவிர ரசிகர்கள். அதன் காரணமாக #பிகில் என்னும் ஹாஷ்டாக் ட்விட்டரில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது...