ஹாலிவுட்டில் மிகப்பிரபலமான நடிகர் வில் ஸ்மித். மென் இன் பிளாக் படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது சுயசரிதையை 'will' என்னும் பெயரில் புத்தகமாகவும் , ‘Best Shape of My Life’ என்ற பெயரில் ஆவணப்படமாகவுய்ம் வெளியிட திட்டமிட்டார் வில் ஸ்மித்.


பொதுவாக தனது வாழ்க்கையை எழுதும்பொழுதும், படமாக்கும்பொழுதும் நடந்தவற்றை அதே போலவே சொல்ல சிலர் தயங்குவார்கள் . குறிப்பாக பிரபலங்கள் ஆனால் வில் தனது புத்தகத்தில் பல விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார். இது பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சமீபத்தில் வில் சிறுவயதில் அவரது தாய்க்கு, தந்தையால் ஏற்பட்ட கொடுமைகளை வெளிப்படையாக பகிர்ந்திருந்தார். மேலும் தான் நடிக்க வந்தது, வாங்கிய விருதுகள் , நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைத்துமே தனது தாய்க்காகத்தான் என உருக்கமாக தெரிவித்திருந்தார். 







இந்த நிலையில் வில் எழுதிய மற்றொரு சம்பவமும் பேசு பொருளாகியுள்ளது. வில் ஸ்மித் ஒரு முறை தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் அளவுக்கு உடலுறவு கொண்டதாக கூறியிருக்கிறார். 16 வயது இருக்கும்பொழுது முதல் முறையாக மெலனி என்ற பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டதாக எழுதிய அவர், ”தான் இரண்டு வார இசை சுற்றுப்பயணத்திற்காக வெளிநாடு சென்ற பொழுதுதன் காதலி தன்னை ஏமாற்றியதை அறிந்து அவருடன் பிரேக் அப் செய்துள்ளார் . ஆனால் அந்த வலியிலிருந்து மீள முடியாத Will , “rampant sexual intercourse” என்னும் சைக்கோதனமான உடலுறவை நான் மற்றொரு பெண்ணுடன் மேற்கொண்டேன்" என குறிப்பிட்டுள்ளார். அப்படியான நிலைக்கு நான் தள்ளப்பட்டிருப்பதை அறிந்த பிறகு நான் ஹோமியோபதி சிகிச்சை எடுத்து பிறகு  இயல்புநிலைக்கு திரும்பினேன் என குறிப்பிட்டுள்ளார். வில் ஸ்மித்தின் இத்தகைய வெளிப்படையான பதிவை அவரது ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்காதவர்களாக திகைத்துள்ளனர்.







முன்னதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தாயின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த வில் ஸ்மித். நான் கிச்சனில் எனது காதலியுடன் இருப்பதை நீங்கள் பார்த்துவிட்டீர்கள். அதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் என ஷேர் செய்திருந்தார். அந்த பெண்தான் வில் ஸ்மித்தின் முதல் காதலி மெலனிபோலும்.  மார்க் மேன்சன் என்பவருடன் இணைந்து வில்ஸ்மித் எழுதிய ‘வில்’என்னும் தனது சுயசரிதை புத்தகம் நல்ல வரவேற்பை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.