தனது ஆதர்ச இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவை, முதன்முறையாக பிரிந்து தேவி ஸ்ரீ பிரசாத்தை தி வாரியர் படத்திற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. இது குறித்து தி வாரியர் படத்தின் நடிகரான ராம் பொத்தினேனியிடம் ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேகமாக பதில் அளித்துள்ளார். அந்த பதில் பின்வருமாறு:-


ராம் பொத்தினேனி கூறும் போது, “ எனக்கு யுவனின் மியூசிக் ரொம்ப பிடிக்கும். காதல் கொண்டேன் படத்தின் மியூசிக்கை அந்த டைம்ல கேக்கும் போது வெற லெவலில் இருந்தது. ஆனால் இந்தப்படம் தொடங்கும் போதே, தேவி ஸ்ரீ பிரசாத்தான் மியூசிக் போட வேண்டுமென நினைத்தோம். நாங்கள் தேவியை கமிட் செய்யும் போது புஷ்பா படம் கூட ரிலீஸ் ஆக வில்லை. நான் அவரை கமிட் செய்யும் போது, அவரும் கொஞ்சம் மார்க்கெட் இல்லாமல் இருந்தார். இருப்பினும் அவரை கமிட் செய்தோம். காரணம், அவர் மிகவும் திறமையானவர். இவர்கள் போன்ற திறமையாளர்களுக்கு வெற்றி தோல்வி ஒரு சீசன் போல வந்து போகும். அவர் எனது படங்களுக்கு அவர் அமைத்த பெரும்பான்மையான பாடல்கள் ஹிட்டடித்துள்ளன.”  என்று பேசியுள்ளார். 


 


                                         


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருந்தவர் இயக்குநர் லிங்குசாமி. இவர் எடுத்த ரன், சண்டைக்கோழி பாகம் 1, பீமா, பையா உள்ளிட்ட  படங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. மார்க்கெட்டின் உச்சியில் இருந்த அவர் சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் கைகோர்த்தார்.


 


 


 


                                         


ஆனால் அந்தப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்ட லிங்குசாமி, தொடர்ந்து சண்டைக்கோழி படத்தின் இராண்டாம் பாகத்தை எடுத்தார். ஆனால் இந்தப்படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற வில்லை. இதனையடுத்து தற்போது தெலுங்கு நடிகரான ராம் பொத்தினேனி நடிப்பில் தி வாரியர் படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப்படம் வருகிற 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.