Mahesh Babu Apology: அது உங்க பொண்ணுனு தெரியாது..! ஷங்கரை தேடிப்போய் மன்னிப்பு கேட்ட நடிகர் மகேஷ்பாபு..!!

ஆட்டோகிராப் வாங்க வந்த  இயக்குநர் ஷங்கர் மகள்களை கோரிக்கையை நிராகரித்தது குறித்து மகேஷ் பாபு பேசியுள்ளார். 

Continues below advertisement

ஆட்டோகிராப் வாங்க வந்த  இயக்குநர் ஷங்கர் மகள்களை கோரிக்கையை நிராகரித்தது குறித்து மகேஷ் பாபு  பேசியுள்ளார். 

Continues below advertisement

இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் மகேஷ் பாபு பேசும் போது, “ ஒரு முறை நான் எனது குடும்பத்தினருடன் ஒரு ஸ்டார் ஹோட்டலில் உணவருந்தி கொண்டிருந்தேன். அப்போது இரண்டு பெண்கள் என்னிடம் ஆட்டோகிராப் வாங்க வந்தனர். நான் அவர்களிடம் மரியாதையாக, நான் குடும்பத்தினருடன் இருக்கிறேன். அதனால் இப்போது முடியாது என்று கூறி அனுப்பினேன்.

 

அப்போது இயக்குநர் மேஹர் ரமேஷ் அவர்கள் இரண்டு பேரும் இயக்குநர் ஷங்கரின் மகள்கள் என்று என்னிடம் வந்து சொன்னார். அவர் சொன்ன உடன் அதிர்ச்சியடைந்து விட்டேன். உடனே கீழே சென்று பார்த்தேன். ஷங்கர் அங்கே உட்கார்ந்திருந்தார். அவரிடம் சென்று நான் செய்தது குறித்து கூறி மன்னிப்புக் கேட்டேன்.


அப்போது ஷங்கர் ''ஹீரோக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை மகள்கள் தெரிந்து கொள்ள வேண்டும் நினைத்தேன்'' என்று கூறினார். அவ்வளவு பெரிய இயக்குநரின் மகள்கள் இவ்வளவு எளிமையாக இருப்பதை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன்.” என்று கூறியுள்ளார். 

 

ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் நடித்து வரும் புதிய படத்தை இயக்குகிறார். மகேஷ்பாபுவின்“Sarkaru Vaari Paata’’   படம் வரும் மே மாதம் வெளியாக உள்ளது. இதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola