அமீரின் காதலை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்பதை பாவனி தெரிவித்து இருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் கொடுத்த வரவேற்பால் அந்த நிகழ்ச்சியை அடுத்தடுத்த சீசன்களுக்கு கொண்டு சென்றது. அதன் படி அண்மையில் பிக்பாஸ் சீசன் 5 -ன் நிகழ்ச்சியும், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் நடந்து முடிந்தது. அதில் பிக்பாஸ் சீசன் 5- ல் ராஜூ ஜெயமோகனும், அட்ல்டிமேட் நிகழ்ச்சியில் பாலாவும் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிக்பாஸ் சீசன் 5 பொறுத்தவரை போட்டியாளர்களாக உள்ளே இருந்த அமீரும் பாவனியும் காதலித்ததாக சொல்லப்பட்டது.
நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பின்னரும் பேட்டிகளில் ஒன்றாகவே வலம் வந்தனர். இந்த நிலையில் இவர்கள் அடுத்ததாக விஜய் டிவியின் பிக்பாஸ் ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் ஜோடியாக பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அவர்களது பர்சனல் தொடர்பான பல விஷயங்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் அமீர் பாவனிக்கு காதல் பரிசு கொடுத்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், “ என்னுடைய காதலை நான் எல்லா வகையிலும் என்னுடைய காதலை சொல்லிவிட்டேன். ஆனால் நீ என்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளவே இல்லை.” என்று கூறி அரங்கில் இருந்த ரசிகர்களிடம் அட்டைகளை கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தினார். தொடர்ந்து பாவனிக்கும், அவருக்குமான பயணத்தை குறும்படமாகவும் போட்டுக்காண்பித்த அமீர், தொடர்ந்து ஒரு மோதிரத்தை கொடுத்து காதலுக்கு சம்மதம் வாங்க முயன்றார். ஆனால் பாவனி கடைசி வரை அந்த மோதிரத்தை வாங்கவே இல்லை. அதன் பிறகு பேசிய அமீர், நீ என்னை ஏற்றுக்கொள்ள நேரம் எடுத்துக்கொள்.. ஆனால் இப்போது நீ இதை வாங்கிகொள் என்று சொல்ல பாவனி அந்த மோதிரத்தை வாங்கிக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய பாவனி, என்னுடைய கணவர் இறந்த பிறகு, என்னை அதிஷ்டமில்லாதவள் என்று பலர் சொன்னார்கள். அதுதான் எனக்கு பயம். இப்போது யாரையாவது நான் ஏற்றுக்கொண்டால் அவரையும் இழந்துவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது. அதனால் எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் வேண்டும்” என்று பேசினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.