தமிழ் எழுத்துழகில் ராசி அழகப்பன் முக்கியமானவர். இதுவரையில் 47 க்கும் மேற்பட்ட கவிதைகள் , சிறுகதைகள் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். அதே போல பத்திக்கை துறை , திரைப்படத்துறை என இவர் கால் பதிக்காத கலைத்துறைகளே கிடையாது எனலாம். வண்ணத்துப்பூச்சி , குகன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதில் வண்ணத்துப்பூச்சி திரைப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட திரைப்படம். இது வெளியான நேரத்தில் பள்ளிகளிலும் கூட குழந்தைகளுக்காக திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது
கமலுக்கான ராசி !
பன்முக திறமை கொண்ட ராசி அழகப்பனை கமல் தனது திரைப்படங்களில் உதவி இயக்குநராகவும், கதை விவாத பணிகளிலும் பயன்படுத்திக்கொண்டார். கமல் ஆரமித்த மய்யம் என்னும் பத்திரிக்கையில் சினிமா , இலக்கியம் உள்ளிட்ட படைப்புகளால் அதிகம் கவனம் பெற தொடங்கினார் அழகப்பன்.அதன் பிறகு கமல்ஹாசன் தன்னுடைய அபூர்வசகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜர் உள்ளிட்ட சில திரைப்படத்தில் ராசி அழகப்பனை உதவி இயக்குநராக பணியாற்ற வாய்ப்பு கொடுத்திருக்கிறார் கமல். அழகப்பனின் பணி கமல்ஹாசனுக்கு பிடித்து போனது , இதனால் மகளிர் மட்டும், தேவர்மகன், விருமாண்டி பட கதை விவாத பணிகளில் ராசி அழகப்பனையும் சேர்த்துக்கொண்டார்.
விருமாண்டி உருவான விதம் :
தேவர் மகன் திரைப்படத்திற்கு பிறகு விருமாண்டி திரைப்படத்தில் கதை விவாத பணியில் இணைந்தார் ராசி அழகப்பன்.அந்த சமயத்தில் படத்திற்கு சண்டியன் என பெயர் வைக்கப்பட்டிருந்தது. படத்தில் வில்லனாக நடிக்க நாசரை ஒப்பந்தம் செய்யலாம் என முடிவெடுத்த கமல்ஹாசன் அவரை அலுவலகத்திற்கு வரவழைத்திருக்கிறார். அப்போது ராசி அழகப்பன் படத்தில் நாசர் சாரை வில்லனாக நடிக்க வைக்க வேண்டாம் , புதுமுகங்கள் யாராவது முயற்சிக்கலாம் என தெரிவிக்க உடனே நாசர் “ ஏன்டா என் வயித்துல மண் அள்ளி போடுற “ என தெரிவித்திருக்கிறார். ஏன் நாசர் வேண்டாம் என கமல்ஹாசன் கேட்டதற்கு , முன்னதாக குருதிபுனல், தேவர் மகன் உள்ளிட்ட சில படங்களில் நீங்கள் இருவரும் ஹிட் ஆன ஜோடிகள் மீண்டும் அதே ஃபார்மெட் வேண்டாம். அதே பாணியில் இருந்தால் , உங்கள் ரசிகர்களுக்கு தீனி போட வேண்டாமா என கூற, கமலும் அதற்கு தலையசத்திருக்கிறார்.
பின்னர் கமல்ஹாசனுக்கான மாறுபட்ட கதாபாத்திரத்தை செதுக்கி பசுபதியை வில்லனாக ஒப்பந்தம் செய்திருக்கின்றனர் படக்குழுவினர். படத்தில் கமல்ஹாசனுக்கு பின்னால் இருக்கும் அத்தனை கதாபாத்திரங்களையும் ராசி அழகப்பன்தான் ஆடிஷன் வைத்து , பார்த்து பார்த்து செலெக்ட் செய்திருக்கிறார். படத்தில் கம்ல்ஹாசன் பின்னால் நிற்கும் அனைவருமே புதுமுகங்கள் என்பதும் அதுவும் ராசி அழகப்பன் அவர்களின் ஐடியாத்தான் என்பதும் நினைவுக்கூறத்தக்கது.