நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரும் , இயக்குநருமான ராமேஷ் கண்ணா பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா படம் , ஃபிரண்ட்ஸ் படத்தில் விஜய் மற்றும் சூர்யாவுடன் இணைந்து இவர் நடித்த காமெடி சீன்கள் எல்லாம் இன்றளவும் சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால் ரஜினி நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான லிங்கா படத்தில் காமெடியனாக ஒப்பந்தமாகியிருந்தார் ரமேஷ் கண்ணா . அந்த படத்திலிருந்து திடீரென வெளியேறினார். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.  


“லிங்கா படத்தில் எனக்கு தகுந்த கேரக்டர் கொடுக்கவில்லை. அதனால் நான் கோபத்தில் வெளியேறிவிட்டேன். டிஸ்கஸ் செய்தேன். ஒரு கேரக்டர் டெவலப் செய்தேன். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது படையப்பா படத்தில் சௌந்தர்யாவிற்கு லெட்டர் கொடுப்பது போன்ற கேரக்டரை உருவாக்கியது நான்தான். ரஜினிக்கும் சௌந்தர்யாவிற்கும் திருமணம் ஆன பிறகு அந்த லெட்டரை ஒட்டு போட்டு சௌந்தர்யா கையில் கொடுத்து, படையப்பன் உங்கள காதலிக்கிறார் என்பேன். அதனை வாங்கிய பிறகு சௌந்தர்யா சிரிப்பார். ரஜினி என்னை கூப்பிட்டு கல்யாணமே ஆகி வீட்டுக்கே கூப்பிட்டு வந்துட்டேன், இப்போதான் லெட்டர் கொடுக்குறியா என என்னை அறைவது போல நான் உருவாக்கியிருந்தேன். ரஜினிக்கு அது மிகவும் பிடித்துப்போனது.




ஆனால் அதை சௌந்தர்யா கிழித்து போடுவது போல , எமோசனல் சீனாக மாற்றியது ரஜினிதான் . அதே போலத்தான், லிங்கா படத்தில் மஞ்சள் பை வைத்திருப்பது போன்ற கேரக்டர் ஒன்றை உருவாக்கினேன். அந்த படத்திலும் கூட அப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கும். ஆனால் ஏன் அப்படியான பை வைத்திருக்கிறார் என யாருக்குமே தெரியாமல் போச்சு. ஏன்னா அந்த சீன விட்டாங்க. அந்த படத்தில் நான் ரஜினி எல்லோரும் திருட போகும் பொழுது , வெற்றிலை பாக்கு, கற்பூரம் எல்லாம் ஏற்றிதான் திருட செல்வோம். ஆனால் திரும்ப வரும்பொழுது அதனை விட்டுவிட்டு வந்துவிடுவேன். இது ரஜினி சாருக்கெல்லாம் தெரியாது. உடனே ரஜினி சார் நாம திருடுவது எப்படி போலீஸ் கண்டுபிடிக்கிறார்கள் என கேட்க, அங்குதான் தேங்காய் பழம் எல்லாத்தையும் விட்டுவிட்டு வந்துவிடுகிறீர்களே ...என்பார்கள். உடனே யார் இதையெல்லாம் செய்கிறார்கள் என்றவுடன் ரஜினிசார் என்னை பார்த்து  அதட்டுவது  போல அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியிருந்தேன். அதே போல மூடிய கோவிலில் தேங்காய், பழம் எதுவும் இல்லாத நிலையில் என் மஞ்சள் பையில் இருந்த பூ, பழம் அனைத்தையும் கொடுத்து என்னை திட்டுவியே.. இப்போ எவ்வளவு உதவியா இருந்துச்சு பார்த்தியா என சொல்லுவேன்.“ இப்படி மஞ்சள் பைக்கு பின்னால் இருக்கும் கதையை கூறியிருக்கிறார் ரமேஷ் கண்ணா.




ஆனால் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அந்த கதாபாத்திரத்தை ஏற்கவில்லை என மிகவும் வருத்தப்பட்டேன் என்னும் ரமேஷ் கண்ணா. ”இயக்குநர் ரஜினி நண்பர்களாக இளமையாக இருக்கும் ஆட்களை போட விரும்புவதாக தெரிவிப்பதாக கூறினார்கள். என்ன யூத்... நான் அப்போதான் அஜித்திற்கு நண்பனாக நடித்தேன். அதோடு மட்டுமல்லாமல் ஒரு பாட்டில் பாலம் கட்ட வேண்டியதை, படம் முழுக்க செய்யக்கூடாது. காதல் சீன்ஸ்லாம் வைத்தால்தான் நல்லா இருக்கும். அதெல்லாம் குறைந்துவிட்டது. நான் இல்லாததால் லிங்கா ஓடவில்லை என்று கூறமாட்டனே்; நான் படத்தில் இருந்திருந்தால் அதற்கான முயற்சிகளை எடுத்திருப்பேன்“ என்கிறார் ரமேஷ் கண்ணா.