மீடியாவில் ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடர்ந்தவர் RJ பாலாஜி. ரேடியோவில் தனக்கென தனி ரசிகர்களை வைத்திருந்த பாலாஜி , அவ்வபோது திரைப்படங்களிலும் தலைக்காட்ட துவங்கினார். சில  படங்களில் குரலாக மட்டுமே ஒலித்திருக்கிறார். 2013 ஆம் ஆண்டு வெளியான எதிர் நீச்சல் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தீயா வேலை செய்யனும் குமாரு, வாயை மூடி பேசவும், இது என்ன மாயம் , காற்று வெளியிடை என பல படங்களில் காமெடியனாகவும், துணை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.  சமீபத்தில் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் , சத்தியராஜ் , ஊர்வசி காம்போவில் வீட்டுல விசேசம் உள்ளிட்ட படங்களை இயக்கி அதில் ஹீரோவாக நடித்திருந்தார். 







காமெடியானாக நடிக்காததற்கான காரணம் :


பாலாஜி நேர்காணல் ஒன்றில், “நானும் ரௌடிதான் திரைப்படம் நல்லா இருந்தது. அந்த படத்திற்கு பிறகு நான் காமெடியனா பண்ண மாட்டேன் என்றெல்லாம் இல்லை. நான் பண்ணினேன் ஆனா  அந்த படங்களில் என் காமெடி நல்லா இல்லை. இதை வேற யாராவது சொல்வதற்கு முன்னதாக நானே விலகிட்டேன். இன்னொரு மிகப்பெரிய பிரச்சினை  என் கெரியர்ல, நான் நடிக்க வந்த சமயத்துல என்னை போல வந்த  பல காமெடி நடிகர்களை சந்தானம் சார் என்ன பண்ணினாரோ அதையே பண்ண வச்சாங்க. ஒருத்தன் 10 வருஷம் நல்லா பண்ணதையே நானும் ஏன் பண்ணனும் . ஏழைகளின் அனிருத் போல , ஏழைகளின் சந்தானமா நான் ? எனக்கு அது பிடிக்கல அதனால நான் பண்ணல “ என்றார் ஆர்.ஜே. பாலாஜி



சமீப காலமாகவே ஆர்.ஜே. பாலஜியின் வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண