எங்கள் தனிப்பட்ட விசயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள், உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று தெலுங்கு நடிகர் ராம்சரணின் மனைவி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.  அதற்கான காரணம் இதுதான்.


தென்னிந்திய சினிமா நடிகர்களில், மிகவும் பிரபலமானவர் மெஹா ஸ்டார் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரண். இவரும் தெலுங்கில் மட்டும் இல்லாமல், தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். சமீபத்தில் இவர் நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்றப் படம் RRR. இப்படத்தினை பிரம்மாண்ட இயக்குநர் ராஜ மௌலி இயக்கியிருந்தார். தென்னிந்திய மொழிகளில் மட்டுமிலாமல், இந்திய மொழிகளில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. 


இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் 14ம் தேதியில், லண்டனில் சந்தித்து பழகிய தனது காதலி உபாசனாவை திருமணம் செய்து கொண்டார். அண்மையில் தங்களின், 10வது ஆண்டு திருமண விழாவைக் கொண்டாடினர். இந்நிலையில் திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆன நிலையில், இவர்கள் இன்னும் குழந்தைகள் பெற்றுக்கொள்லவில்லை. இதனால் இவர்களுக்கு இன்னும் குழந்தைகள் பிறக்கவில்லை என பலரும், அவர்களின் தனிப்பட்ட இல்லற வாழ்க்கையினை பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர். இதனை அறிந்த ராம் சரணின் மனைவி உபாசனா, எரிச்சலடைந்துள்ளார். “எங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எதற்காக கேள்வி எழுப்பிக் கொண்டு உள்ளீர்கள்? நாங்கள் எப்போது குழந்தை பெற்றுக் கொண்டுள்ள வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்து கொள்வோம். உங்கள் வேலையினை நீங்கள் பாருங்கள்” என காட்டமாக கூறியுள்ளார். 


மேலும் குழந்தை பற்றி ராம் சரண் கூறியுள்ளதாவது, நான் மெஹா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன், அவரின் ரசிகர்களை திருப்திபடுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. மேலும் நான் சினிமாவிலும், எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் நான் பயணிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. அதேபோல் எனது மனைவி உபாசனாவும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அடைய வேண்டிய உயரங்கள் இன்னும் இருக்கிறது. அதற்கிடையில் குழந்தை பெற்றுக் கொள்வதைப் பற்றி நாங்கள் யோசிக்கப்போதில்லை. மாறாக குழந்தைகள் பெற்றுக் கொள்ள எங்களுக்கு இன்னும் ஆண்டுகள் பல ஆகும். எங்களின் தனிப்பட்ட வாழ்வைப் பற்றி எதற்காக கேள்வி எழுப்புகிறீர்கள் என கூறியுள்ளார்.    




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண