Samantha | அமீர்கானுக்கு சைதன்யா வைத்த விருந்து! சமந்தா ஆப்சண்ட் - மீண்டும் புகைச்சல்!

சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் அவர்களுக்கு குடும்பப்பெயரை நீக்கி எஸ் என வைத்திருந்ததார். இந்நிகழ்வுகள் அனைத்து இவ்விருவரின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது

Continues below advertisement

தெலுங்கு முன்னணி நடிகரான நாகர்ஜூனா சமீபத்தில் அமீர்கானுக்கு வழங்கிய இரவு விருந்தில் நடிகை சமந்தா இல்லாததது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் சமந்தா- சைதன்யாவிற்கு இடையே இருந்த பிரச்சனை உறுதியாகிவிட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Continues below advertisement

தமிழ்சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறப்புத்தோற்றின் மூலம் அறிமுகமான சமந்தா, அதன் பின்னர் ஈ, நீ தானே எந்தன் பொந்தன் வசந்தம் உள்ளிட்ட பல்வேறு நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்த சமந்தா தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டுள்ளார். திரைப்படத்துறையில் வளர்ச்சிப்பாதையில் சென்றுக்கொண்டிருந்த சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜூனின் மகன் நாக சைதன்யாவை காதலித்தார். இருவரும் மாற்று மதத்தினர் என்றாலும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துக்கொண்டதோடு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் சமந்தா- நாகா சைதன்யாவின் உறவு பேச்சுப்பொருளாக மாறியதோடு, அனைத்துப் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் இவ்விருவரும் விவகாரத்து செய்யப்போகிறார்கள் என்ற செய்திகள் வந்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் இருவரும் நேரிடையாக இதுகுறித்து எந்தவிதமாக கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. மேலும் சமீபத்தில் திருப்பதி சென்ற சமந்தாவிடம், நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது இதுக்குறித்து பதில் அளிக்காமல் கோபமடைந்து சென்றதாகக் கூறப்படுகிறது.  குறிப்பாக சமந்தா நடித்த படம் ஒன்றில் படுகவர்ச்சியாக நடித்திருந்ததால், குடும்பத்தில் இருந்தவர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் அவர்களுக்கு குடும்பப்பெயரை நீக்கி எஸ் என வைத்திருந்ததார். இந்நிகழ்வுகள் அனைத்து இவ்விருவரின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, பிரியப்போகிறார்கள் என்ற புகைச்சல் கிளம்பியது.

இந்நிலையில் தான் இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது. படத்தின் புரோமோசன் விளம்பரத்திற்காக ஹிந்தி நடிகர் அமீர்கான்  சமீபத்தில் ஹைதாராபாத் சென்றிருந்தார். அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்ற நாகார்ஜூனா குடும்பத்தினர் அவருக்கு இரவு நேர விருந்திற்கு அழைத்துள்ளனர். இதனையடுத்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சைதன்யா வழங்கிய விருந்தில் அமீர்கான் கலந்துகொண்டதோடு, மகிழ்ச்சியாக அவர்கள் கேக் வெட்டிக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளத்தில் வெளியானது. ஆனால் இதில் சமந்தா இடம் பெறவில்லை. இந்த புகைப்படம் தான் தற்போது ரசிகர்களுக்கிடையே சைதன்யா- சமந்தா தம்பதியினர் தனித்தனியாக தான் வாழ்ந்துவருகிறார்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இதற்கிடையில் தான்,  சமீபத்தில் சைதன்யா  அளித்த பேட்டி ஒன்றில், “எனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப காலத்திலிருந்தே, நான் எனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கையை எப்போதும் இணைத்தது இல்லை. சிறுவயதில் இருந்தே நான் என் பெற்றோர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட விஷயம் இது தான். ஷூட்டிங் முடித்து வீட்டிற்கு வந்தால் இருவரும்  அதைப்பற்றி கொஞ்சம் கூட பேச மாட்டார்கள். நானும் அப்படித்தான் இருக்கிறேன் என கூறினார். எனவே எனது குடும்ப வாழ்க்கையை குறித்து எந்தவித பதிலும் தெரிவிக்க விரும்பவில்லை எனக் கூறியிருந்தார்.  எனவே நடிகை சமந்தா- நாகா சைதன்யா இருவரும் பிரியப்போகிறார்களா? அல்லது மீண்டும் இணையப்போகிறார்களா? என்பதை ரசிகர்கள் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola