பாலிவுட் நடிகர்  கோவிந்தாவிற்கும் கொரோனா தோற்று உறுதி .

பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவிற்கு  கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது

Continues below advertisement

 

Continues below advertisement

பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவிற்கு  கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு கொரோனாவின் பரவல் சற்று அதிகமாகவே உள்ளது .

 சில தினங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் அமீர் கான் , மாதவன் ,அக்‌ஷய் குமார் மற்றும் கார்த்திக் ஆர்யன் போன்றோருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டு அனைவரும் தனிமை படுத்தி கொண்ட செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது . 


இந்நிலையில் , நேற்று நடிகர் கோவிந்தாவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது .57 வயது நிரம்பிய அவருக்கு தொற்றின் அறிகுறி சற்று கம்மியாக இருந்தாலும் அவர் தனது வீட்டில்  தனிமை படுத்த பட்டுள்ளார் . தனது படக்குழுவில் இருக்கும் அனைவரையும் தனிமைபடுத்தி கொள்ளுமாறு அவர் கேட்டு கொண்டார் . 

Continues below advertisement
Sponsored Links by Taboola