தொலைக்காட்சி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஒரு ரியாலிட்டி ஷோ உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி. 2017ம் ஆண்டு ஜூன் மாதம்தான் முதன் முதலில் தமிழில் பிக் பாஸ் சீசன் தொடங்கப்பட்டது. மற்ற மொழிகளில் இதுவரையில் ஏராளமான சீசன்கள் ஒளிபரப்பாகி இருந்தாலும் தமிழில் ஒளிபரப்பான நிகழ்ச்சிக்கு வரவேற்பு உச்சத்தில் இருந்தது. அதற்கு காரணம் அந்த கான்செப்ட் தமிழ் மக்களுக்கு புதுமையாக இருந்ததே. ஏற்கனவே மக்களுக்கு இந்த நிகழ்ச்சி பற்றின புரிதல் கொஞ்சம் இருந்தாலும் முதல் முறையாக நமது தமிழில் ஒளிபரப்பாக போகிறது என்பதால் மிகுந்த ஆர்வத்தோடு அதை எதிர் நோக்கினார்கள். ஆர்வத்திற்கு மற்றொரு காரணம் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது என்றால் அதில் ஈர்ப்பு இருக்கத்தானே செய்யும்.
பிக்பாஸ் சீசன் 1 :
பிக்பாஸ் 1 சீசன் 2017-ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. இது வரையில் நடைபெற்ற சீசன்களில் மிகவும் ஸ்வாரஸ்யமாக இருந்தது முதல் சீசன் எனலாம். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற அந்த சீசன் அமோகமான வெற்றியை பெற்றது. பிக் பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார் ஆரவ். ரன்னர் அப்பாக கவிஞர் சினேகன் வெற்றி பெற்றார்.
பிக்பாஸ் சீசன் 2 :
பிக் பாஸ் 2 சீசன் 2018ம் ஆண்டு ஒளிபரப்பானது. இந்த சீசன் ஒரு ஸ்பெஷல் சீசனாக அமைந்தது. காரணம் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற நால்வரும் பெண்களே. ஐஸ்வர்யா தத்தா, விஜயலக்ஷ்மி, ஜனனி மற்றும் ரித்விகா. இதில் ஐஸ்வர்யா தத்தா இரண்டாம் இடத்தையும் ரித்விகா பிக் பாஸ் டைட்டிலையும் கைப்பற்றினர். முதல் முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே இறுதி சுற்றில் நுழைந்தது பிக்பாஸ் தமிழில் மட்டுமே.
பிக்பாஸ் சீசன் 3 :
பிக் பாஸ் 3 சீசன் 2019ம் ஆண்டு ஒளிபரப்பானது. 16 போட்டியாளர்களுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மலேசிய நாட்டை சேர்ந்த பாடகர் முகேன் ராவ் தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார். இரண்டாவது இடத்தை சாண்டி மாஸ்டர் கைப்பற்றினார்.
பிக்பாஸ் சீசன் 4 :
பிக்பாஸ் 4 சீசன் சற்று தாமதமாக 2020ம் ஆண்டு மாதம் தொடங்கியது. பல துறைகளில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனின் வெற்றியாளராக ஆரி அர்ஜுனா டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை பாலாஜி முருகதாஸ் கைப்பற்றினார்.
பிக்பாஸ் சீசன் 5 :
பிக் பாஸ் 5 சீசன் அக்டோபர் 2021ம் ஒளிபரப்பானது. இந்த சீசன் கொஞ்சம் அதிகமாகவே கலக்கலாக இருந்ததற்கு காரணம் பிரியங்கா - தாமரை இடையே இருந்த மோதல் தான். இந்த சீசன் வெற்றியாளராக டைட்டில் வென்றார் ராஜு ஜெகன் மோகன். இரண்டாவது இடத்தை பிரியங்கா தட்டிச்சென்றார்.
பிக்பாஸ் அல்டிமேட் :
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைந்த உடன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஓடிடியில் ஒளிபரப்பானது. இதுவரையில் வெற்றிகரமாக நடைபெற்ற 5 சீசன்களை கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் 24/7 ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது. ஒவ்வொரு சீசனிலும் ஒரு சில போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களை அல்டிமேட் சீசனில் போட்டியிட வைத்தனர். சண்டை சச்சரவு என ஒவ்வொரு சீசனிலும் இருந்த போட்டியாளர்கள் அனைவரையும் ஒரே வீட்டுக்குள் ஒன்றாக விட்டால் என்ன நடக்கும் என்பது இந்த சீசன் மூலம் வெளிப்பட்டது. பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்ட பாலா முருகதாஸ் மற்றும் இரண்டாம் இடத்தை கைப்பற்றினார் நிரூப்.
பிக்பாஸ் சீசன் 6 :
தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடக்கம் முதல் இறுதி வரையில் பரபரப்பிலேயே இருந்து வருகிறது. இந்த ஆறாவது சீசனில் சுவாரஸ்யம் சற்று குறைவாகவே இருந்தது என்பது மக்களின் கருத்து என்றாலும் சண்டைக்கும் சச்சரவுகளும் மற்ற சீசன்களை விட சற்றும் தாழ்ந்தவர்கள் இல்லை என நிரூபித்தவர்கள். இந்த சீசனுக்கான வோட்டிங் லைன் நேற்று இரவுடன் முடிவடைந்தது. 13 லட்சத்துடன் வெளியேறிய அமுதவாணன் தவிர தற்போது பிக் பாஸ் சீசன் 6 இறுதி சுற்றுக்கு சென்றுள்ளவர்கள் மைனா நந்தினி, அஸீம், ஷிவின் மற்றும் விக்ரமன்.
இதுவரையில் நடைபெற்ற ஐந்து சீசன்களிலும் யார் டைட்டில் ஜெயிப்பார்கள் என்ற ஒரு ஆணித்தரமான யூகம் தொடக்கம் முதலே இருந்தது. ஆனால் இந்த சீசனில் அப்படி யார் ஜெயிப்பார் என்று உறுதியாக யூகிக்க முடியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளார்கள்.
இருப்பினும் ஒரு சில பார்வையாளர்கள் விக்ரமன் அல்லது ஷிவின் டைட்டில் வின்னராகலாம் என கணிக்கத்துள்ளார்கள். என்னதான் மக்கள் கணிதலும் இன்னும் சில மணி நேரங்களிலேயே யார் வெற்றியாளர் எனும் தகவல் வெளியாகி விடும் என்பதால் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறார்கள் சிறியவர் முதல் பெரியவர்கள் வரையில் இருக்கும் பிக் பாஸ் ரசிகர்கள்.
வெயிட் அண்ட் வாட்ச்...