மின்சார இருசக்கர வாகனம்:

Continues below advertisement

இந்தியாவில் நிலவும் அதிகபட்ச எரிபொருட்களின் விலை, அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மின்சார வாகனங்களின் பயன்பாடு பொதுமக்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த ஆண்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்தது. இதன் காரணமாகவே, பல்வேறு முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மட்டுமின்றி, பல புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் மின்சார வாகன உற்பத்தியில் களமிறங்கி வருகின்றன.  

டிவோட் நிறுவனத்தின் மின்சார வாகனம் அறிமுகம்:

Continues below advertisement

அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம்  ஜோத்பூரை சேர்ந்த டிவோட் மோட்டார்ஸ் நிறுவனம் , உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ள ப்ரோடோடைப் மின்சார மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துஉள்ளது. டிவோட் மோட்டார்ஸ் எனப்படும் அந்நிறுவனம் தனது ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தை பிரிட்டனில் கட்டமைத்து உள்ளது. இந்த நிறுவனத்தின் டெவலப்மெண்ட் செண்டர் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. தினசரி பயன்பாடு மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றவாறு, இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் சிறப்பு அம்சங்கள்:

புதிய டிவோட் மோட்டார்சைக்கிளில் டிஎப்டி ஸ்கிரீன், கீலெஸ் சிஸ்டம், டைப் 2 சார்ஜிங் பாயிண்ட் வழங்கப்படுகிறது. இதில் உள்ள ஸ்மார்ட் இண்டர்ஃபேஸ் மூலம் ஸ்பீடு மோட்களும் வழங்கப்படுகிறது. எனினும், இதுபற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. டிவோட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் லித்தியம் LFP பேட்டரி பயன்படுத்துகிறது. இத்துடன் ஆன்போர்டு சார்ஜர், சார்ஜிங் ப்ரோடெக்ஷன் வழங்கப்படுகிறது. இதன் பேட்டரி பேக் உடன் ஸ்மார்ட் பேட்டரி மேனேஜ்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டெம்பரேச்சர் கண்ட்ரோல், ரிஜெனரேஷன் போன்ற அம்சங்கள் உள்ளது.

பேட்டரி விவரங்கள்:

இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் உள்ள 9.5 கிலோவாட் மோட்டார் அதிவேக அக்செலரேஷன் வழங்குகிறது. இந்த எலெக்ட்ரிக் பைக் மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. மேலும் முழு சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர்கள் வரை செல்லும். இந்த ஆண்டே டிவோட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

சார்ஜிங் திறன்:

சார்ஜிங்கை பொருத்தவரை இந்த மோட்டார்சைக்கிளை ஒரு மணி நேரத்திற்கு சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டின் மத்தியில் டிவோட் நிறுவனத்தின், மின்சார இருசக்கர வாகனம் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, இந்த மாடலின் விலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI