எம்புரான் 17 காட்சிகள் நீக்கம் 


பிருத்விராஜ் இயக்கி மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் கடந்த மார்ச் 27 ஆம் தேதி உலகளவில் வெளியானது. 200 கோடிகளை கடந்து வசூல் ரீதியாக வெற்றிபெற்றுள்ள இப்படத்தில் இருந்து 17 காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. இப்படத்தில் இடம்பெற்ற பல காட்சிகளுக்கு இரு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு வந்துள்ளன. குறிப்பாக குஜராத் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள காட்சிக்கு பாஜக இந்துத்துவ அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இதனால் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளது. 


யார் இந்த பாபு பஜ்ரங்கி ?


2002 ஆம் ஆண்டு குஜராத்தில் முஸ்லிம் அழித்தொழிப்பு கலவரம் எம்புரான் படத்தில் இடம்பெறுகிறார்கள். 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் தி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த ரயிலில்  அயொத்தியில் இருந்து திரும்பி வந்துக் கொண்டிருந்த 59 இந்து துறவிகள் உயிரிழந்தார்கள். இதனைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தை முன் நின்று நடத்தியவர்களில் முக்கியமான நபர் பாபு பஜ்ரங்கி . நரோதாவில் 97 இஸ்லாமியர்களின் கொலையில் இவருக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.


இந்த குறிப்பிட்ட நிகழ்வை மையமாக வைத்து எம்புரான் படத்தின் ஆரம்ப காட்சி இடம்பெற்றுள்ளது. இந்து ஆண்கள் இஸ்லாமிய ஆண் பெண் குழந்தைகளை கொடூரமாக கொலை செய்யும் வன்முறை காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த கொலைகார கூட்டத்திற்கு தலைவனாக பஜ்ரங்கி என்கிற கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. இதனால் தான் எம்புரான் படத்திற்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்க்கின்றன. 


பாபு பஜ்ரங்கியின் கொலை வாக்குமூலம்






எம்புரான் படத்தில் இருந்து 17 காட்சிகளை நீக்கியிருக்க கூடாது என்பது இன்னொரு தரப்பு ரச்கர்களின் கருத்தாக இருக்கிறது. மோகன்லால் மற்றும் பிருத்விராஜிடம் இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என ரசிகர்கள் அதிருபதி வெளிப்படுத்தி வருகிறார்கள்.  இப்படியான நிலையில்    நிஜ பாபு பஜ்ரங்கி பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில்  கர்ப்பினி பெண் ஒருவரை தான் கொன்றதாகவும் வீட்டிற்கு வந்து படுத்த போது ஒரு ராஜாவைப் போல் உணர்ந்ததாகவும் பேசியிருக்கிறார். கொலை செய்த மனிதனே இவ்வளவு பெருமையாக தனது குற்றத்தை பற்றி பேசும் போது அதை சினிமாக எடுத்தவர்கள் ஏன் காட்சிகளை நீக்க வேண்டும் என கேள்வி எழுந்துள்ளது