Ranbir Kapoor: நம்பர் எட்டு.. குழந்தையின் பெயர்.. டாட்டூ ரகசியம் சொன்ன ரன்பீர் கபூர்!

அலியா ரன்பீர் இருவரும் தங்களது முதல் குழந்தையை அல்ட்ரா சவுண்ட் ஸ்கான் செய்யும் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். 

Continues below advertisement

நடிகர்கள் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் தங்களது முதல் குழந்தை பிறக்க இருப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.இதற்கிடையே அவரது அண்மை பேட்டி குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.அதில் அவரிடம் டாட்டு பற்றி கேள்வி எழுப்பப்படுகிறது. அதற்கு பதில் அளித்த அவர், ‘நான் இதுவரை டாட்டூ போட்டுக்கொண்டதில்லை. இனிமேல் ஒருவேளை டாட்டூ போடலாம். 8 என்கிற எண்ணை டாட்டுவாகப் போட்டுக் கொள்ளலாம் அல்லது என்னுடைய பிள்ளைகளின் பெயரை டாட்டூவாகப் போட்டுக் கொள்ளலாம்.நான் அதுபற்றி இன்னு யோசிக்கவில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார். டாட்டூ பற்றி அவர் பேட்டி அளித்த அடுத்த சில தினத்திலேயே அலியா ரன்பீர் இருவரும் தங்களது முதல் குழந்தையை அல்ட்ரா சவுண்ட் ஸ்கான் செய்யும் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். 

Continues below advertisement

ஆலியா மற்றும் ரன்பீர் படத்தைப் பகிர்ந்துகொண்டதை அடுத்து ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரன்பீர் கபூரின் அக்கா ரித்திமா தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘எனது பிள்ளைகளுக்குப் பிள்ளை பிறக்கப் போகிறது(My babies are having babies) எனப் பகிர்ந்துள்ளார்’ 


ரன்பீர் ஆலியா ஜோடி கடந்த ஏப்ரல் மாதம் கபூர் இல்லத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ மிகச் சிறிய அளவில் திருமணம் செய்துகொண்டனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola