Rasipalan Today, June 28 : மகரத்திற்கு தன்னம்பிக்கை...ரிஷபத்திற்கு சேமிப்பு... இன்றைய ராசி பலன்கள்!

Rasipalan Today, June 28 : இன்று எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் என்று கீழே காணலாம்.

Continues below advertisement

நாள்: 28.06.2022, செவ்வாய்கிழமை 

Continues below advertisement

நல்ல நேரம் :

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை 

கௌரி நல்ல நேரம் :

காலை 10.45 மணி முதல் காலை 11.45மணி வரை

மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை

இராகு :

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை :

மதியம் 12.00 மணி முதல் மாலை 1.30 மணி வரை

எமகண்டம் :

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

சூலம் – வடக்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே, புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றம் பிறக்கும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்படும். திட்டமிட்ட சில பணிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். புதிய ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே,  எதிர்பார்த்த தனவரவால் சேமிப்பு மேம்படும். நண்பர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். அடிப்படை கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே, வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள்.

கடகம் :

கடக ராசி நேயர்களே, கூட்டு வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளால் காலதாமதம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களுடன் நிதானமாக செயல்படவும். மனதில் பற்றற்ற சிந்தனைகள் அதிகரிக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே, வர்த்தகம் தொடர்பான துறைகளில் லாபம் மேம்படும். கால்நடை தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே, செய்யும் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். தபால் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். சுருக்கெழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள். விளம்பரம் தொடர்பான துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

துலாம் :

துலாம் ராசி நேயர்களே, வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். தனிப்பட்ட கருத்துக்களை கூறும் பொழுது பொறுமையுடன் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். நண்பர்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே,  எதிர்காலம் தொடர்பான சில குழப்பங்களால் செயல்பாடுகளில் சோர்வு ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். கோபத்தை விட பொறுமையை கையாளுவது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். நெருக்கமானவர்களிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். 

தனுசு :

தனுசு ராசி நேயர்களே, வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்து கொள்வது நல்லது. ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் ஏற்படும். வரவுக்கு மீறிய செலவுகளால் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். 

மகரம் :

மகர ராசி நேயர்களே, எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பாகப்பிரிவினை தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே,  விற்பனை சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். குழந்தைகளின் ஆரம்ப கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றத்தை செய்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். காசோலை தொடர்பான செயல்பாடுகளில் சற்று விழிப்புணர்வு வேண்டும். வியாபார பணிகளில் தனவரவு மேம்படும். 

மீனம்:

மீன ராசி நேயர்களே,  கணிதம் தொடர்பான துறைகளில் புதுவிதமான சூழ்நிலைகள் ஏற்படும். குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய கலைகளை கற்பதில் ஆர்வம் உண்டாகும். மனதில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். பழக்க வழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement