நடிகர் மாதவன் தனக்கு மிகவும் பிடித்தமான நடிகையாக பிபாஷா பாசுவை பற்றி வர்ணித்துப் பேசியது தற்போது கவனம் பெற்றுள்ளது.
நடிகர் ஆர்.மாதவனும், நடிகை பிபாசா பாசுவும் 2012 ஆம் ஆண்டு ஜோடி பிரேக்கர்ஸ் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அந்தப் படத்தில் அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி மிகுந்த பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு பிடிஐ நிறுவனத்துக்கு ஆர்.மாதவன் அளித்த பேட்டி ஒன்றில் பிபாஷாவைப் பற்றி ஏகத்துக்கும் புகழ்ந்துள்ளார்.
அந்தப் பேட்டியிலிருந்து..
திரையில் ஒரு ஜோடிக்கு நல்ல கெமிஸ்ட்ரி தெரிகிறது என்றால் நிஜத்தில் அந்த நபர் மீது மற்றொருவருக்கு ஈர்ப்பு இருக்க வேண்டும். நான் நிஜமாகவே பிபாஷாவால் ஈர்க்கப்பட்டேன். அவர் அழகானவர். அந்த அழகு ஆழமானது. செட்டில் ஒரு நாளும் அவர் தான் ஒரு மிகப்பெரிய நடிகை என்ற பந்தாவைக் காட்டியதே இல்லை. இவ்வாறு மாதவன் கூறினார். பிபாஷா பாசு, கடந்த 2016 ஆம் ஆண்டு கரண் சிங் குரோவர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவர் அலோன் என்ற படத்தில் 2015ல் அறிமுகமாகினர். அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டனர். முன்னதாக பிபாஷா பாசு பாலிவுட் நடிகர் ஜான் ஆப்பிரஹாமை டேட் செய்து வந்தார். இந்த ஜோடி 10 ஆண்டுகள் டேட் செய்து வந்தது. 2011ல் இந்த ஜோடி பிரிந்தது.
கடைசியாக் பிபாஷா பாசு 2020 ஆம் ஆண்டு எம்எக்ஸ்ப்ளேயர் ஓடிடி தளத்தில் வெளியான டேஞ்சரஸ் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். அதில் கரண் சிங் குரோவரும் நடித்திருந்தார். அவர்களுடன் சோனாலி ரவுத், நடாஷா சூரி, சூயாஷ் ராய், நிதின் அரோரா ஆகியோர் நடித்திருந்தனர்.
ஆர்.மாதவன் அண்மையில் ராக்கட்டரி தி நம்பி விளைவு என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். அதில் விஞ்ஞானி நம்பி நாராயணின் ரோலில் மாதவன் நடித்திருந்தார். இப்படம் இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டது.
மாதவன் அண்மையில் தனது 23 வது திருமண நாளை கொண்டாடினார். மாதவனின் மனைவி பெயர் சரிதா ப்ரிஜே. திருமண நாள் புகைப்படங்களைப் பகிர்ந்த மாதவன், இதற்கு முன்னால் இல்லாத அளவுக்கு நான் உன் மீது இவ்வளவு காதல் கொண்டிருப்பது எப்படி? இப்போதுதான் எல்லாம் ஆரம்பிக்கிறது. இனிய மணநாள் வாழ்த்துகள் மனைவியே என்று பதிவிட்டிருந்தார்.
இந்தத் தம்பதிக்கு வேதாந்த் என்ற மகன் இருக்கிறார். அவர் 2005ல் பிறந்தார். அண்மையில் 48வது தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு சாதனைகள் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.