டிசம்பர் 14 ஆம் தேதி கடந்த ஞாயிறன்று அடையாளம் தெரியாத இரு இறந்த உடலை கண்ட மக்கள் அவசர உதவிக்குழுவுக்கு தெரிவித்துள்ளார்கள். விசாரணையில் இறந்தவர்கள் ஹாலிவுட்டில் பல்வேறு பிரபல திரைப்படங்களை இயக்கி நடித்த ராப் ரெயினர் மற்றும் அவரது மனைவி என தெரியவந்துள்ளது. இந்த கொலையில் இறந்த தம்பதிகளின் மகன் நிக் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராப் ரெயினர் மற்றும் மனைவி கொலை
ஹாலிவுட்டில் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி பல படங்களில் நடித்துள்ளார் ராப் ரெயினர். இவர் 1989 ஆம் ஆண்டு இயக்கிய when Harry Met Sally திரைப்படம் இன்றளவும் ஒரு சிறந்த காதல் திரைப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. The Princess Bride , A Few Good Men ஆகியவரை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள். அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ச்சியாக தனது படைப்பில் நகைச்சுவை வழியாக குரலெழுப்பியவர் என ரசிகரகள் அவரை கொண்டாடி வருகிறார்கள். 78 வயதான ராப் ரெய்னர் மற்றும் 68 வயதான அவரது மனைவி மிஷல் ஆகிய இருவரும் லாஸ் எஞ்சலஸில் உள்ள தங்களது வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கண்டறியப்பட்டுள்ளார்கள். இந்த கொலை குறித்தான மற்ற தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை. இந்த கொலையில் அவர்களது மகன் நிக் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.