இந்தியாவின் பிரபலமான கார் நிறுவனமாக திகழ்வது ஹுண்டாய். இவர்கள் பட்ஜெட் விலை முதல் சொகுசு ரகங்கள் வரை பல்வேறு கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறது. 

Continues below advertisement

Hyundai Venue N Line:

அந்த வரிசையில் ஹுண்டாய் நிறுவனத்தின் வெற்றிகரமான கார் Hyundai Venue N Line ஆகும். இந்த கார் ஒரு காம்பக்ட் எஸ்யூவி கார் ஆகும்.  Hyundai Venue காரின் அப்டேட் வெர்சனாக இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது. 5 சீட்டர் காரான இந்த காரில் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 

மைலேஜ்:

இந்த காரில் மொத்தம் 6 வேரியண்ட்கள் உள்ளது. 998 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக்கில் ஓடும் திறன் கொண்டது இந்த கார் ஆகும். 118 பிஎச்பி குதிரை ஆற்றல் கொண்டது. இந்த காரில் மேனுவல் வெர்சன் 18.74 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. ஆட்டோமெட்டிக் வெர்சன் 20 கிலோமீ்ட்டர் வரை மைலேஜ் தருகிறது. 

Continues below advertisement

விலை:

இதன் தொடக்க விலை ரூபாய் 13.12 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 19.20 லட்சம் ஆகும். இந்த காரில் அடாஸ் வசதிகள் உள்ளது. ஆர்17 சக்கரங்கள் வசதி உள்ளது. 172 என்எம் டார்க் இழுதிறன் கொண்ட கார் இதுவாகும். இந்த காரில் 6 மற்றும் 7 கியர்கள் கொண்ட வேரியண்ட் உள்ளது. 12.3 இன்ச் ஸ்கிரீன் டேஷ்போர்ட் இந்த காரில்  2 உள்ளது. இது தொடுதிரை ஆகும். இதில் 360 டிகிரி கேமரா, டிபிஎம்எஸ், எலக்ட்ரானிக் பார்க்கிங் ப்ரேக்க, மெடல் பெடல்ஸ், ஓடிஏ வசதிகள் உள்ளது. 

Level 2 ADAS வசதி உள்ளது. இதில் 6 ஏர்பேக்குகள் உள்ளது. 21 பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஏபிஎஸ் இபிடி வசதியுடன் உள்ளது. பார்க்கிங் சென்சார் வசதி உள்ளது. வேக அலர்ட் எச்சரிக்கை உள்ளது. 

வேரியண்ட்கள்:

Venue N Line N6 Petrol Turbo Manual - ரூ.13.12 லட்சம்

Venue N Line N6 Petrol Turbo Manual Dual Tone - ரூ.13.34 லட்சம்

Venue N Line N6 Petrol Turbo Automatic - ரூ.14.44 லட்சம்

Venue N Line N10 Petrol Turbo Automatic - ரூ.18.97 லட்சம்

Venue N Line N10 Petrol Turbo Automatic Dual Tone - ரூ.19.20 லட்சம் ஆகும். 

கியா சைரோஸ், ஸ்கோடா கைலாக், கியா சோனட் ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI