டபுள் கேம் ஆடும் மாதம்பட்டி ரங்கராஜ்
மெஹந்தி சர்க்கஸ் படத்தில் நாயகனாக நடித்த மாதம்பட்டி ரங்கராஜ் , குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பரவலாக கவனமீர்த்தார். இவருக்கு ஏற்கனவே ஸ்ருதி ரங்கராஜ் என்கிற வழக்கறிஞருடன் திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில் அவருக்கு ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுடன் தொடர்பு இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. மேலும் முதல் மனைவி ஸ்ருதியுடன் அவருக்கு விவாகரத்து ஆகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை மறுக்கும் படியாக தனது குடும்பத்துடன் ஸ்ருதி ரங்கராஜ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார்.
முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜின் நிலை என்ன ?
இப்படியான நிலையில் தான் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டாவுக்கு திருமணமான புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தான் 6 மாதங்கள் கர்ப்பினியாக இருப்பதாகவும் ஜாய் பதிவிட்டிருந்தார். இந்த தகவல் ரசிகர்களிடையே மேலும் குழப்பம் அதிகரித்தது. சினிமாவில் பல முன்னணி நடிகர் நடிகைகளின் ஆடை வடிவமைப்பாளராக இருந்து வருகிறார் ஜார் கிரிஸில்டா. ஒருபக்கம் மாதம்பட்டி ரங்கராஜூடன் தனது திருமண புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஜாய் கிரிஸில்டா. மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பையோவை மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி என மாற்றியுள்ளார். மறுபக்கம் மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி தனது சமூக வலைதள பெயரை ஸ்ருதி ரங்கராஜ் என்று வைத்துள்ளார். இதனால் இரண்டாவது திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்தாரா என்கிற கேள்வி இருந்து வருகிறது. இதுகுறித்து யார் தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வ விளக்கம் ஏதும் வெளியாகாதது குழப்பத்தை மேலும் நீட்டிக்கச் செய்கிறது.
ஜாய்க்கும் ரங்கராஜுக்கும் சில மாதங்களுக்கு முன்பே ரகசிய திருமணம் நடைபெற்றதாகவும் தற்போது இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் ஜாய் கோபத்தில் திருமண புகைப்படங்களை லீக் செய்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.