விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி , நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல் . முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து நகைச்சுவை கலந்து வெளியாகியிருக்கும் இந்த படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒரே படத்தில் இரண்டு முன்னணி நாயகிகளை நடிக்க வைப்பது அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல. அதற்கு எந்த நாயகிகளும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் . இந்த நிலையில் சமந்தா , நயன்தாரா இருவரும் ஒரே படத்தில் நடிக்க விஜய் சேதுபதிதான் காரணம் என சமந்தா மனம் திறந்திருக்கிறார் சமந்தா. டிவிட்டர் பக்கத்தில் ஒருவர் “ காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக வேறு ஒருவர் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என பேசி வருகிறார்கள். ஆனால் உண்மையில் விஜய் சேதுபதி படத்தில் நடிக்கவில்லை என்றால் சமந்தாவும் , நயன்தாராவும் நிச்சயமாக நடித்திருக்குமாட்டார்கள் “ என பதிவிட்டிருந்தார். இதனை ரீட்வீட் செய்த சமந்தா “உண்மைதான் “ என தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதியும் நேர்காணல் ஒன்றில் சமந்தாவை கதிஜா கேரக்டரில் நடிக்க சம்மதிக்க வைத்ததே நான்தான் என தெரிவித்துள்ளார். நயன் தாரா, சமந்தா இருவருக்கும் இடையிலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எந்தவொரு ஈகோவும் இருந்தது இல்லை. அவர்களை ஒன்றாக பார்க்கும் பொழுது அத்தனை அழகாக இருந்தது , கதாபாத்திரத்தில் எந்தவொரு ஏற்றத்தாழ்வும் இல்லாமல் விக்னேஷ் சிவன் பார்த்துக்கொண்டார் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி சமந்தா மற்றும் நயன்தாராவுக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்பது அவர்கள் பதிவிடும் புகைப்படங்கள் வாயிலாக நாம் புரிந்துக்கொள்ள முடிகிறது. சமீபத்தில் கூட விக்னேஷ் சிவன் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதில் விஜய் சேதுபதி விக்னேஷ் சிவனின் தோளில் சாய்ந்துக்கொண்டு , காதலர்கள் போல போஸ் கொடுத்திருந்தார். அந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது , அவர் நயன்தாராவையும் , விக்னேஷ் சிவனையும் சேதுபதி இமிட்டேட் செய்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியும்.