முத்து
கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படம் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து கமர்ஷியல் படங்களை இயக்கி வெற்றி பெற்ற இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாருடன் ஒரு படத்தில் இணைய வேண்டும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரும்பினார். அந்நேரம் மலையாளத்தில் 1994 ஆம் ஆண்டு தென்மாவின் கொம்பத்தின் படம் வெளியாகி சக்கைப்போடு போட அதன் ரீமேக் உரிமை வாங்கப்படுகிறது. அதுவே “முத்து” படமாக உருவானது. இப்படத்தில் மீனா, சரத்பாபு, சுபஸ்ரீ, பொன்னம்பலம், ராதாரவி, வடிவேலு, செந்தில், விசித்ரா, ஜெய பாரதி, ரகுவரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைத்தார்.
ஜப்பானியர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருக்கும் முத்து
ரஜினி கே.எஸ் ரவிகுமார் காம்பினேஷனில் வெளியான படங்களில் மிகப்பெரிய வெற்றிப் படம் முத்து. இப்படத்திற்காக ரஜினிகாந்திற்கு சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் மாநில விருது கிடைத்தது. மலையாளத்தைக் காட்டிலும் தமிழில் ரஜினியின் ஸ்டைல் , காமெடி , ஆக்ஷன் , செண்டிமண்ட் , ரொமான்ஸ் என கே.எஸ் ரவிகுமாரின் திரைக்கதை , ஏ.ஆர் ரஹ்மானின் இசை என திரையரங்கில் கொண்டாட்ட விருந்தாக அமைந்தது முத்து படம். தமிழில் மட்டுமில்லாமல் ஜப்பானில் வெளியான முதல் தமிழ் படம் முத்து என்பது குறிப்பிடத் தக்கது. ஜப்பானில் அதிக நாட்கள் ஓடிய இந்திய திரைப்படம் என்கிற சாதனையை இப்படம் உருவாக்கியது. இப்படத்திற்கு பின் ஜப்பானியர்கள் மத்தியில் ரஜினிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. ரஜினி ரசிகர் மன்றம் ஜப்பானில் தொடங்கப்பட்டது. முத்து திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் எட்டவிருக்கும் நிலையில் இன்றுவரை இப்படம் ஜப்பானியர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது
அந்த வகையில் ஜப்பானில் குளிர்பாண சாதனத்தின் விளம்பரம் ஒன்று முத்து படத்தின் தில்லானா தில்லானா பாடல் ஸ்டைலில் எடுக்கப்பட்டுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. முத்து என்கிற இந்த குளிர்பானத்தை பருகியதும் ஜப்பானியர் ஒருவர் ரஜினியைப் போல் நடனமாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வரைலாகி வருகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI