அர்ஜூன் ரெட்டி படத்தில் ரகட் பாயாக நடித்த விஜய் தேவரகொண்டா இப்படத்தில் அப்படியே ஃபேமிலி பாயாக இந்த படத்தில் மாறியுள்ளார்.


ஃபேமிலி ஸ்டார்


விஜய் தேவரகொண்டா  மற்றும் மிருணால் தாக்கூர் இணைந்து நடித்து வரும் படம் ஃபேமிலி ஸ்டார். தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தை பரசுராம் இயக்குகிறார். கோபி சுந்தர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். வரும் ஏப்ரல் மாதம் இந்தப் படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த 10 நாட்களாக சென்னையில் நடபெற்றது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதை படக்குழு சமீபத்தில் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.


ட்ரெய்லர் எப்படி?


அர்ஜூன் ரெட்டி படத்தில் தொடங்கி விஜய் தேவரகொண்டா நடித்த பெரும்பாலான படங்களில் ரகட் பாயாகவே நடித்திருக்கிறார். இதனால் நிறைய விமர்சனங்களையும் அவர் எதிர்கொண்டிருக்கிறார். அந்த விமர்சனத்தை போக்குவதற்காகவோ என்னவோ இந்த முறை கொஞ்சம் வித்தியாசமான ஒரு கதைக்களத்தை அவர் தேர்வு செய்திருக்கிறார். எந்த வித பிரச்சனைக்கும் போக விரும்பாத பிராக்டிக்கலான ஒரு கதாபாத்திரமாக இப்படத்தில் அவர் நடித்திருக்கிறார்.


வழக்கம் போல் மிருணால் தாக்கூர் இந்தப் படத்திலும் தனது நடிப்பால் நடிகர்களை கவர்வார் என்று எதிர்பார்க்கலாம். ரொமான்ஸ் காமெடி என சென்று கொண்டிருக்கும் ட்ரெய்லர் தீடிரென்று ஆக்‌ஷன் திருப்பம் ஒன்றை எடுக்கிறது. சாதுவாக இருக்கும் நம்ம தேவரகொன்டா ஏன் ஆக்‌ஷன் டிராக்கில் பயணிக்கிறார் என்பதே படத்தின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.






வெளியான கொஞ்ச நேரத்திலேயே இந்த ட்ரெய்லர் ஆறு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை காட்டுகிறது.


விஜய் தேவரகொண்டா  சமந்தாவுடன் இணைந்து நடித்த குஷி படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்தப் படம் சுமாரான வெற்றிபெற்றது. விஜய தேவரகொண்டா நடித்து முன்னதாக வெளியான லைகர்  படமும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் ஃபேமிலி ஸ்டார் படம் அவருக்கு வெற்றி படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.  அதே நேரத்தில் மிருணால் தாக்கூர் நானி நடித்து கடந்த ஆண்டு வெளியானப் படம் ஹாய் நானா. இந்தப் படம் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றது. சீதா ராமம் படத்தைப் போல் இந்தப் படத்திலும் மிருணால் தாக்கூரின் கதாபாத்திரம் பாராட்டப் பட்டது.