Watch Video: கொஞ்சம் க்யூட்டா.. டான்ஸ் லைட்டா..! யுவனின் ஆட்டத்தை பகிர்ந்த மனைவி!

மியூசிக் ஆல்பங்களை தயாரித்து வரும் யுவன், ‘கேண்டி’ என்ற பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். பாலிவுட் பாடகர் பனுஷாலியுடன் சேர்ந்து பாடி இருக்கிறார்.

Continues below advertisement

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திரை உலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இந்த இசை பயணத்தில் வெவ்வேறு மொழிகளில் பல படங்களில் இசையமைத்திருக்கும் யுவன், சமீப காலமாக சிங்கிள்ஸ் எனப்படும் தனிப்பாடல்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

Continues below advertisement

மியூசிக் ஆல்பங்களை தயாரித்து வரும் யுவன், ‘கேண்டி’ என்ற பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். பாலிவுட் பாடகர் பனுஷாலியுடன் சேர்ந்து பாடி இருக்கிறார். மார்ச் 2-ம் தேதி ப்ரோமோ வெளியான நிலையில் 3-ம் முழு வீடியோ வெளியானது. இப்பாடல் " U1records" யூடியூப் சேனலில் வெளியானது. யுவன் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டான இந்த பாடலுக்கான ப்ரொமோஷன் வேலைகளில் யுவன் முழுவீச்சில் இறங்கி இருக்கிறார்.

அந்த வரிசையில், இந்த பாடலுக்கு யுவன் நடனமாடுவது போன்ற ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. யுவனின் மனைவியும், யுவன் ரெக்கார்ட்ஸ் குழுவின் க்ரியேட்டீவ் இயக்குனருமான ஜஃப்ரூன் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார்.

இதில், க்யூட்டாக நடனமாடும் யுவனின் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், யுவன் ‘செம ஜாலியா’ என கமெண்ட் செய்து வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய யுவன், “என் அம்மாவை மிஸ் செய்கிறேன். ஆனால், அந்த இடத்தை என் மனைவியும், என் மகளும் சரியாக பூர்த்தி செய்துவிட்டனர். அந்த வெற்றிடம் இப்போது இல்லை என நம்புகிறேன். இறைவனுக்கு நன்றி” என தெரிவித்திருந்தார். 

மேலும், “இசையமைப்பதை தவிர்த்து, படங்கள் தயாரித்து வருகிறோம். அடுத்ததாக, ஒரு கதை எழுதி இருக்கிறேன். ஹீரோ இல்லை. பெண் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொண்ட ஒரு கதை. விரைவில் இயக்க இருக்கிறேன். அது தொடர்பான அப்டேட்டை பிறகு சொல்கிறேன்” என சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்.

யுவனின் இந்த 25 ஆண்டுகால பயணத்தில், யுவனின் கோல்டன் எரா என்றால் அது 2000-களின் முதல் பத்து ஆண்டுகள்தான். அதனை தொடர்ந்து, தன்னை அப்டேட் செய்து கொண்டே இருக்கும் யுவன், மக்களுக்கு பிடித்த இசையை அவ்வப்போது தந்து வருகிறார். இனி சினிமா, தனிப்பாடல்கள் யுவன் பிஸியாக இருக்கப்போகிறார் என தெரிகிறது.


மேலும் படிக்க: 25 Years of Yuvanism: பிரிந்த காதலுக்கு மயிலிறகால் இசை மருந்திட்ட யுவன்..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola